Advertisement

விளக்குகள் எரியாததால் சண்முகா நகர் மக்கள் பீதி

மேட்டூர்: மின்விளக்குகளே எரியாததால், சண்முகா நகரில் வசிக்கும் மக்கள் பீதியில் உள்ளனர். வீரக்கல்புதூர் பேரூராட்சி, முதலாவது வார்டு, சண்முகா நகர், மேட்டூர் - சேலம் நெடுஞ்சாலையோரம் உள்ளது. அங்கு, 150க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அங்கு, 15 மின் கம்பங்கள் இருந்தபோதும், ஒன்றில் கூட மின் விளக்கு எரியவில்லை. அண்மையில், மர்ம நபர்கள் திருட முயன்றனர். மக்கள், அவர்களை விரட்டியதால், அசம்பாவிதம் தடுக்கப்பட்டது. எனினும், கம்பங்களில் மின் விளக்குகள் எரியாததால், அந்த நபர்கள் யாரென தெரியவில்லை. இதனால், எரியாத மின் விளக்குகளுக்கு பதிலாக, புது விளக்குகள் பொருத்த, பேரூராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement