Advertisement

சீரழிந்த பிரதான சாலை; வாகன ஓட்டிகள் கவலை

Share
வாழப்பாடி: வாழப்பாடியில், கடலூர் பிரதான சாலை வழியாக, அரசு, தனியார் பஸ்கள் மட்டுமின்றி, கனரக வாகனங்கள் என, தினமும், ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. குறிப்பாக, அரசு மருத்துவமனை முதல், அஞ்சல் நிலையம் வரை, சாலை சீரழிந்துள்ளதோடு, அதன் இருபுறமும் பள்ளம் தோண்டி, மூடப்படாமல் உள்ளது. இதனால், இரவில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாறி விழுந்து காயமடைகின்றனர். இதுகுறித்து, நெடுஞ்சாலைத்துறையினரிடம் புகாரளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என, அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement