Advertisement

குடிநீர் குழாய் சேதம்; பொதுமக்கள் தவிப்பு

பனமரத்துப்பட்டி: மல்லூரில், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். அங்கு, ராசிபுரம் -பூலாம்பட்டி கூட்டுக்குடிநீர் திட்டத்தில், காவிரி குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. குறிப்பாக, பிரதான தொட்டியிலிருந்து, வெற்றி நகர் செல்லும் குழாயில், மாரியம்மன் கோவில் அருகே, கந்தசாமி கோவில் தெரு ஆகிய இடங்களில் சேதமாகி, காவிரி குடிநீர் வீணாகி வருகிறது. அதேபோல், பி.மேட்டூர் சாலையிலும் குழாய் சேதமாகியுள்ளது. இதுனால், குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, மக்கள் சிரமத்துக்கு ஆளாவதால், குழாயை சீரமைக்க, பேரூராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement