Advertisement

கோவில் நிலத்தில் போர்வெல் அமைப்பு? 1 மணி நேரம் மக்கள் சாலை மறியல்

Share
ஓமலூர்: கோவில் நிலத்தில், ஆழ்துளை குழாய் கிணறு அமைத்ததை கண்டித்து, மக்கள், ஒரு மணி நேரம் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காடையாம்பட்டி, கே.மோரூர், அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் துரைராஜ், 63. இவரது நிலம் அருகே, ஓராண்டுக்கு முன், ஆழ்துளை குழாய் கிணறு அமைத்தார். சில மாதத்துக்கு முன், அதில் மின்மோட்டாரை பொருத்தி பயன்படுத்தினார். அப்பகுதி மக்கள், கோவில் நிலத்தில் ஆழ்துளை கிணறு அமைத்ததாக கூறி, நேற்று காலை, சேலம் - பொம்மிடி நெடுஞ்சாலையில், கற்களை வைத்து, மறியலில் ஈடுபட்டனர். இதனால், ஒரு மணி நேரம், வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தன. இதையடுத்து, தீவட்டிப்பட்டி போலீசார், வருவாய்த்துறை அதிகாரிகள் வந்து, பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ஆழ்துளை கிணறு அமைத்த இடம், புறம்போக்கு என்பதால், பி.டி.ஓ.,விடம் தெரிவித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, அதிகாரிகள் கூறினர். இதையடுத்து, மக்கள் கலைந்து சென்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement