Advertisement

பா.ஜ., தேர்தல் செலவு ரூ.1,264 கோடி: காங்., செய்த செலவு ரூ.820 கோடி

Share

இந்த செய்தியை கேட்க

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி : கடந்தாண்டு நடந்த லோக்சபா தேர்தல் மற்றும் நான்கு மாநில சட்டசபை தேர்தல்களுக்கு, 1,264 கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாக, பா.ஜ., தெரிவித்துள்ளது. எதிர்க்கட்சியான காங்கிரஸ், 820 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது.

பா.ஜ., தாக்கல்:



ஒவ்வொரு முறையும் தேர்தல் நடக்கும் போது, அதற்கு எவ்வளவு செலவிடப்பட்டது என்ற விபரத்தை, அரசியல் கட்சிகள், தேர்தல் ஆணையத்திடம் ஒவ்வொரு ஆண்டும் தாக்கல் செய்ய வேண்டும். இந்த விபரம், தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்படும்.

இதன்படி, கடந்தாண்டு நடந்த லோக்சபா தேர்தல், ஏப்ரல், மே மாதங்களில் நடந்த, ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், சிக்கிம், ஒடிசா ஆகிய மாநிலங்களின் சட்டசபை தேர்தல்களில் செய்யப்பட்ட செலவு குறித்த விபரத்தை, பா.ஜ., தாக்கல் செய்துள்ளது. இதில், இந்த தேர்தலுக்காக, 1,264 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளது. கடந்த, 2014 லோக்சபா தேர்தலுக்கு, பா.ஜ., 714 கோடி ரூபாய் செலவு செய்திருந்தது.

ரூ.516 கோடி:



கடந்தாண்டு செய்யப்பட்ட செலவுகளில், ஊடகங்களில் விளம்பரம் செய்வதற்காக மட்டும், 325 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சியான காங்கிரஸ், லோக்சபா தேர்தல் மற்றும் நான்கு மாநில சட்டசபை தேர்தலுக்கு, 820 கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாக தெரிவித்து உள்ளது. இதற்கு முந்தைய லோக்சபா தேர்தலுக்கு, காங்கிரஸ், 516 கோடி ரூபாய் செலவு செய்திருந்தது. இந்த தகவல், தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (6)

  • Endrum Indian - Kolkata,இந்தியா

    அது எப்படி???303 பி ஜெ பி எம் பி அப்போ ரூ 1264 /303 என்று வைத்துக்கொண்டால் கூட ரூ 4 கோடி ஒரு எம் பிக்கு. முஸ்லீம் நேரு காங்கிரஸ் 820 /52 = ரூ 16 கோடி என்று வருகின்றது. 4 மடங்கு. அதுக்குத்தான் இந்த வயித்தெரிச்சலில் தினம் தினம் முஸ்லீம் நேரு இத்தாலிய சோனியா காங்கிரஸ் உளறுவதில் ஒரு நேபல் பரிசு இருந்தால் கிடைக்கும் அளவுக்கு உளறுகின்றதா???அப்போ சரி உளறு பப்பூவே

  • Vmmoorthy Moorthy - hyderabad,இந்தியா

    இவ்வளவு செலவு செய்து நாட்டுக்கு நன்மை செய்யவேண்டும் என்று நினைக்கிறார்கள் இவர்களை நம்பி மக்கள் ஓட்டும் போடுகிறார்கள்.

  • Sampath Kumar - chennai,இந்தியா

    காசுக்கு தகுந்த தோசை கிடைத்து விட்டது என்று சொல்கிறீர்கள் ஓகே ஓகே

  • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

    ஏழை தாயின் மகன்..

  • மணி - புதுகை,இந்தியா

    கட்சிகள் மட்டுமா? ஒரு பஞ்சாயத்து எலெக்ஷனுக்கு இருபத்தி அஞ்சு லட்சம் செலவு செய்யுறானுங்க. என்னடான்னா அஞ்சு வருசத்துல அஞ்சு கோடி எடுத்தரலாம்கிறான். எப்படிப்பட்ட கேவலம் இந்த நாட்டுல நடக்குது பாரு, அடேய் அடேய் ஏதாவது பண்ணுங்கடா இத தடுக்கிறதுக்கு. அப்பாவி ஏழைகளுக்கு போகவேண்டிய பலன்களை அப்படியே வாரிசுருட்ட விட்டுகிட்டு வேடிக்கை பார்க்கிறதே இந்த சமூகம்...

Advertisement