Advertisement

தேனி ஆவின் பால் கேரளாவில் விற்க ஏற்பாடு: அதிகாரிகள் நடவடிக்கை

Share
தேனி : தேனி ஆவின் பாலை கேரளாவில் விற்பனை செய்ய அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

தேனி விவசாயம் சார்ந்த மாவட்டம் என்பதால் பால்மாடு வளர்ப்பு உப தொழிலாக பலர் செய்கின்றனர். இதனால் நல்ல வருவாய் கிடைக்கிறது. மாவட்டத்தில் நாள் ஒன்றுக்கு 1.20 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்கின்றனர்.இதில் குறைந்த அளவாக 5 ஆயிரம் லிட்டர் பால் சில்லரை விற்பனை செய்கிறது. மீதியை மதுரை ஆவினுக்கு அனுப்புகின்றனர்.தேனி ஆவின் தனியாக பிரிக்கப்பட்ட பின் பால் உற்பத்தியை அதிகரிப்பதற்கு நிகராக சில்லரை விற்பனை, உப பொருட்கள் விற்பனையை மேம்படுத்த முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

தேனிக்கு அருகில் உள்ள கேரளாவில் 1.5 சதவீத கொழுப்பு சத்துள்ள பால் கூடுதல் விலைக்கு வாங்கி பயன்படுத்துகின்றனர். ஆவினில் 3.5 சதவீத கொழுப்பு சத்துள்ள பால் தமிழக விலையை விட அங்கு லிட்டருக்கு ரூ.10 அதிகம் விற்கின்றனர். அதனால் ஆவின் பாலுக்கு அங்கு நல்ல வரவேற்பு இருக்கும் என ஆய்வில் தெரிய வந்தது.குமுளி, வண்டிபெரியார், கட்டப்பணை என பல்வேறு பகுதிகளில் ஆவின் பால் சில்லரை விற்பனை செய்ய கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

விரைவில் அங்கு குறைந்தபட்சம் 7 ஆயிரம் முதல் 10 ஆயிரம் லிட்டர் பால் தினமும் விற்பனை செய்ய வாய்ப்பு கிடைக்கும்.தேனி ஆவின் உருவான பின் 1,500 லிட்டர் பால் விற்பனை உயர்ந்துள்ளது. அதிக எண்ணிக்கையில் ஏஜன்டுகள் நியமிக்கப்பட உள்ளனர். மேலும், கிராமங்களில் இருந்து நகரத்திற்கு சைக்கிளில் பால் விற்பனை செய்பவர்களை ஆய்வு செய்து கிராமங்களில் கூட்டுறவு பால் உறபத்தியாளர் சங்கங்கள் புதிதாக ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொது மேலாளர் ராஜாகுமார் தெரிவித்தார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement