Advertisement

குஜராத் நாட்டுமாடுகள் வளர்ப்பில் ஆர்வம் போதிய வருவாய் தருவதால் மகிழ்ச்சி

கம்பம் : போதிய வருவாய்தரும் குஜராத் நாட்டு மாடுகள் வளர்ப்பில், கம்பம் புதுப்பட்டியைச் சேர்ந்தவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

கம்பம் புதுப்பட்டியில் மாலையில் மேய்ச்சலுக்கு சென்ற காளைகளும், பசுக்களும்கூட்டம் கூட்டமாக திரும்பி வந்து கொண்டிருந்தன. அவை கம்பீரமான தோற்றத்துடனும்,பயமுறுத்தும் நீண்ட நெடிய கொம்புகளை கொண்டும், அசைபோட்டபடி நடை போட்டன. அவற்றின் கொட்டிலுக்கு சென்ற போது அங்கு 50 க்கும் மேற்பட்டவை அடைக்கப்பட்டிருந்தன.அங்கிருந்த பூபாலன் கூறுகையில், '' குஜராத்மாநிலத்திலிருந்து இவற்றை வாங்கினோம். கிர், காங்கிரேஸ், சேய்வால், சிந்து, ரெட் சிந்து மற்றும் பிராட்டின்போன்ற ரகங்கள் இதில் உள்ளன.

காங்கிரேஸ் ரகத்தில் காளை மற்றும் பசு உள்ளது. இது மிகவும் அதிசயமானதாகும். சிந்து ரகம், பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்டதாகும். பசுக்கள் ஒரு நாளைக்கு 15 லிட்டர் வரை பால் தருகிறது. பராமரிப்பு செலவுகள் குறைவு. காய்ந்த தீவனம்,பசும் புல் தரலாம். மேய்ச்சலுக்கு சென்று வரும். ஒரு காளை மற்றும் பசுவின் விலை ரூ. 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை ஆகிறது. ஆனால் குஜராத் மற்றும் மத்தியபிரதேசத்தில் இருந்து கொண்டு வர ஒரு மாட்டிற்கு போக்குவரத்து கட்டணம் ரூ. 30 ஆயிரம் வரை ஆகும்.

மொத்த எண்ணிக்கையை கணக்கிட்டு தரவேண்டும்,''என்றார்.இவ்வளவு சிரமப்பட்டு இவற்றை குஜராத் சென்று வாங்கி வர என்ன காரணம் என்று இதை பராமரிக்கும்பார்த்திபன், விஜித்குமார் ஆகியோரிடம் கேட்டதற்கு, ''நமது நாட்டு மாடு இனங்கள் அழிந்து ஜெர்சி ரகங்கள் அதிகரித்துவருகிறது. எனவே வடமாநிலங்களில் உள்ள இந்த நாட்டுமாடு இனங்களை வாங்கி வந்து வளர்க்கின்றோம். கலப்பின முறையில்தரமான நாட்டு மாடுகள் வலம் வரச் செய்வதே எங்களின் நோக்கமாகும். இவற்றின் பராமரிப்பில் தனிக்கவனம் செலுத்தவில்லை. தேவையான பால் கறக்கிறது. போதிய வருவாய் உள்ளது. நாட்டுமாடு உற்பத்தியும், நல்ல வருவாயும் கிடைப்பதால்,எங்களுக்கும் ஆத்ம திருப்தியாக உள்ளது,'' என்றனர்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement