Advertisement

இந்திராவை பற்றி அவதுாறு: வாபஸ் பெற்றார் ராவத்

Share
மும்பை: முன்னாள் பிரதமர் இந்திரா, மும்பை நிழல் உலக தாதாவை சந்தித்ததாக, சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்த கருத்துக்கு, காங்., தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்ததை அடுத்து, தான் கூறிய கருத்தை, அவர், 'வாபஸ்' பெற்றார்.

கண்டனம்மஹாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, தேசியவாத காங்., காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இந்நிலையில், சிவசேனா கட்சியின் மூத்த தலைவரான சஞ்சய் ராவத், சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியதாவது:மும்பை நகரம், ஒரு காலத்தில், தாதாக்களின் பிடியில் இருந்தது. கடந்த, 1960களில் துவங்கி, 1980களின் துவக்கம் வரை, வரதராஜ முதலியார், ஹாஜி மஸ்தான், கரீம் லாலா ஆகிய தாதாக்கள் கோலோச்சினர். ஒருமுறை, மும்பையில் உள்ள தலைமைச் செயலகத்துக்கு ஹாஜி மஸ்தான் வந்தபோது, தலைமைச் செயலகத்தில் உள்ள எல்லாரும், அவரை பார்ப்பதற்காக திரண்டனர். முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான இந்திரா கூட, நிழல் உலக தாதா கரீம் லாலாவை சந்தித்துள்ளார். இவ்வாறு, அவர் கூறினார்.

இதற்கு, காங்கிரஸ் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். அந்த கட்சியின் மூத்த தலைவர்களான மிலிந்த் தியோரா, சஞ்சய் நிரூபம் ஆகியோர், 'உண்மையான தேசபக்தரான இந்திராவை அவமதிக்கும் வகையில் தெரிவித்த கருத்தை, சஞ்சய் ராவத் வாபஸ் பெற வேண்டும்' என்றனர். இதையடுத்து, தான் தெரிவித்த கருத்தை வாபஸ் பெறுவதாக, சஞ்சய் ராவத் தெரிவித்தார். அவர் கூறியதாவது:முன்னாள் பிரதமர் இந்திரா பற்றி, நான் தெரிவித்த கருத்து, யாருடைய மனதையாவது புண்படுத்தியிருந்தால், நான் தெரிவித்த கருத்தை வாபஸ் பெறுகிறேன்.

எதிர்ப்புஇந்திராவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில், சிலர் ஏற்கனவே கருத்து தெரிவித்திருந்தனர்.அப்போதெல்லாம், அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தவன் நான். காங்கிரசைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் பலரும் அமைதியாக இருந்தபோது, நான் கடும் எதிர்ப்பு தெரிவித்தேன். இவ்வாறு, அவர் கூறினார்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (29)

 • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

  அடுத்து இந்திரா காந்தி - தீரேந்திர பிரம்மச்சாரி சந்திப்புகளைப் பற்றி சொல்வார். என ஆவலுடன் எதிர்பார்க்கலாம் ஏண் கூட்டணி சேர்ந்தோம்னு ஆகணும்

 • Indhuindian - Chennai,இந்தியா

  வாபஸ் வாங்கினா என்ன? நடந்தது உண்மைதானே அதைத்தானே சொன்னார் உங்களுக்கு வேணா அது பிடிக்காதா போகலாம் அல்லது சங்கடமாக இருக்கலாம்

 • karthik - ,

  உண்மைய சொன்னா காங்கிரஸ் ஒத்துக்கனும்

 • krishna - chennai,இந்தியா

  புலி பூனை இல்லை செத்த எலியாக மாறி விட்டது.சோனியா சேனாவை நினைத்தாலே சிரிப்பு வருகிறது.ஆனாலும் இந்த மோட்டார் மௌத் சஞ்சய் ரவத்துக்கு இப்படி மரண அடி கிடைத்து கொண்டே இருக்கும்.இன்னும் கொஞ்ச நாளில் சோனியா சேனா ASAWUDIN ஒவாய்சி உடன் கூட்டணி வைக்கும்.பின்னர் இம்ரான் கானுக்கு ஆதரவாக இந்தியாவுக்கு எதிராக பொங்கி எழும்.உத்தவ் தாக்கரேயை இப்படி பதவியில் ஒட்டி கொண்டு இருப்பது மிக கேவலம்.அகில உலக அவமான சின்னம் சோனியா சேனா.

 • Janarthanan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  லேட்டஸ்ட் நியூஸ் மஹாவில் பரோல் வெளியில் வந்த சீரியல் வெடிகுண்டு தீவரவாதி டாக்டர் பாம் (ஜலீல் அன்சாரி ) என்பவன் எஸ்கேப் ஆயிட்டான் ??சோனியா சேனா வான்டெட் எஸ்கேப் ஆக விட்டார்களா ???

Advertisement