Advertisement

புதுச்சேரி முதல்வருக்கு கவர்னர் கிரண்பேடி பதிலடி

Share
புதுச்சேரி :'நில பரிவர்த்தனை தொடர்பாக குற்றச்சாட்டு கூறிய விவகாரத்தில், என்னை எதிர்ப்பதை விடுத்து, அதை கூறிய காங்., எம்.எல்.ஏ.விடம் சவால் விடுங்கள்' என, முதல்வருக்கு, கவர்னர் பதில் அளித்துள்ளார்.
இது தொடர்பாக, கவர்னர் கிரண்பேடி, சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவு:நில பரிவர்த்தனையில் முதல்வர், அவரது மகன் மீது ஆதாரம் உள்ளதாக, அவரது கட்சி எம்.எல்.ஏ., என்னை சந்தித்தபோது தெரிவித்தார். 'ஆதாரம் இருந்தால் சி.பி.ஐ.,யிடம் கொடுங்கள்' என நான் கூறினேன். ஆனால், முதல்வர் தவறான தகவலை கூறி வருகிறார்.
குற்றச்சாட்டு கூறிய எம்.எல்.ஏ.விடம்தான் அவர் முதலில் கேள்வி கேட்க வேண்டும். என்னை எதிர்ப்பது, வெறும் வாய்சண்டையாகத் தான் இருக்கும். எனவே, முதலில் உங்கள் கட்சி எம்.எல்.ஏ.,விடம் சவால் விடுங்கள். விசாரணை நடந்தால் ஆதாரங்களை நிரூபியுங்கள். உங்கள் எம்.எல்.ஏ.விடம் ஆதாரம் இருந்தால் அதை பொதுமக்கள் பார்வைக்கு வைக்க சொல்லி, அதை எதிர்த்து நில்லுங்கள்.இல்லாவிட்டால், சிறப்பு சட்டசபையை கூட்டச் சொல்லுங்கள். அதில் உங்கள் கட்சி எம்.எல்.ஏ.வை பேச சொல்லுங்கள். அங்கு நீங்களும், உங்கள் பதிலை சொல்லுங்கள்.இவ்வாறு கவர்னர் கூறியுள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (5)

  • தாமரை செல்வன்-பழநி - பழநி,இந்தியா

    ஏம்மா நீங்க உங்க தகுதிக்கும் மதிப்புக்கும் இவரிடம் பதில் பேசுவது தேவையா?

  • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

    குற்றச்சாட்டு கூறிய எம்.எல்.ஏ.விடம்தான் அவர் முதலில் கேள்வி கேட்க வேண்டும் என்றால், இவர் எதுக்கு தலையிடவேண்டும் ?

  • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

    ஒரு பொறுப்பில் இருக்கும் இவர், ஆதாரத்தை பார்க்காமலேயே எப்படி வேண்டாத ஒருவர் மேல் பழி சுமத்தலாம் ?

  • ganesh - madurai,இந்தியா

    பாண்டிச்சேரி உங்கள் இருவர் சண்டையால் பாவப்பட்ட பூமிய மாற்றாமல் இருந்தால் .... அந்த மக்களுக்கு நல்ல பலன்கிடைக்கும் மத்தியில் இருந்து

  • Subramanian Arunachalam - CHENNAI,இந்தியா

    நெத்தி அடி என்பது போல கிரண் பேடி அடி

Advertisement