Advertisement

கோயம்பேடு மார்க்கெட் இன்று விடுமுறை 

Share
சென்னை:காணும் பொங்கலை ஒட்டி, சென்னை, கோயம்பேடு மார்க்கெட்டிற்கு, இன்று வியாபாரிகள் விடுமுறை அறிவித்துள்ளனர்.
சென்னை, கோயம்பேடு மார்க்கெட்டிற்கு, பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலங்களில் இருந்தும் காய்கறிகள் வருகின்றன.வெளிநாடுகளில் இருந்து பழங்களும், விற்பனைக்கு வருகின்றன. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களின் தேவை, இதன் வாயிலாக பூர்த்தி செய்யப்படுகிறது. மார்க்கெட்டில், பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் உள்ளனர். பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்திற்காக, பலரும் சொந்த ஊர்களுக்கு சென்றுஉள்ளனர். குறைந்த அளவிலான தொழிலாளர்கள் மட்டுமே, கடைகளில் தங்கி உள்ளனர். காணும் பொங்கல் பண்டிகையை ஒட்டி, இன்று ஒருநாள் மட்டும், மார்க்கெட்டிற்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது. நாளை முதல் கடைகள் வழக்கம்போல இயங்கும் என, மார்க்கெட் ஆலோசகர் சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement