Advertisement

மக்கள்தொகை கணக்கெடுப்பு டில்லியில் இன்று ஆலோசனை

Share
புதுடில்லி: மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடு கணக்கெடுப்பை செயல்படுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம், டில்லியில் இன்று நடக்கிறது.
ஒவ்வொரு, 10 ஆண்டுகளுக்கும் ஒருமுறை, மக்கள்தொகை குறித்த கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. அதற்கு முன், மக்களிடையே தகவல்களை சேகரிக்கும், தேசிய மக்கள்தொகை பதிவேடு கணக்கெடுப்பு நடத்தப்படும்.அதன்படி, வரும், 2021ம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான, தகவல்கள் சேகரிக்கும், என்.பி.ஆர்., எனப்படும் மக்கள்தொகை பதிவேடு விபரங்கள் சேகரிக்கும் பணி, இந்தாண்டு நடக்க உள்ளது. வரும், ஏப்., 1 முதல், செப்., 30 வரை இந்த தகவல் சேகரிப்பு பணிகள் நடக்க உள்ளன.இது தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்கான கூட்டம், மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் தலைமையில், டில்லியில் இன்று நடக்க உள்ளது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்க, மத்திய உள்துறை செயலர் அஜய் பல்லா, அனைத்து மாநில தலைமைச் செயலர்கள், மாநில மக்கள்தொகை இயக்குநர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.குடியுரிமை திருத்தச் சட்டம் உள்ளிட்டவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடக்கும் நிலையில், தேசிய மக்கள்தொகை பதிவேடு கணக்கெடுப்புக்கும், பல்வேறு மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.'இந்தக் கணக்கெடுப்பை எங்களுடைய மாநிலத்தில் நடத்த மாட்டோம்' என, மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்., தலைவருமான மம்தா பானர்ஜி கூறியுள்ளார். 'இந்த ஆலோனை கூட்டத்திலும் பங்கேற்க மாட்டோம்' என, அவர் அறிவித்துள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (7)

  • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

    NPRகணக்கெடுப்பு நடத்தினால் நாட்டில் மூர்க்கர்களின் எண்ணிக்கை மிக அதிகமாகப் பெருகியிருப்பது இருப்பது வெளியாகி பிரச்னையாகுமே அதனால்தான் அவர்களுக்காக இரு பப்புகளும் போராடறாங்க

  • SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா

    மைய அரசை மதியாத மாநில முதல்வர்களை மக்கள்தூக்கி எறியனும் நாட்டு நலன் கருதி. ஊழல் வாதிகளுக்கும் சட்டத்தை மதியாதவர்களுக்கும் நாட்டில் எந்த பதவியையும் அளிக்க மக்கள் நினைக்கவே கூடாது.

  • ராஜவேலு ஏழுமலை - Gummidipoondi,இந்தியா

    ஆட்சி மாறியவுடன் இதை ஒதுக்கிட்டு வேற கணக்கெடுப்பு நடத்தலாம்.

  • Krishna - bangalore,இந்தியா

    BJP LIES, Cheats & Very Dangerous- EXTREME PEOPLE HARASSMENTS By Dictators-Compelled Aadhar Mental Spy tem For Each & Every Silly Things, Power Misusing Officials Incl. Police-Courts, DESTRUCTION OF INDIANS ECONOMY & JOBLESSNESS (Abolish All Govt. Officials & Pay-Scales being Useless, Anti-People, VVV Fat-Waste Expenditures Double Jobs But Only With Minm Wages One Per Family). Abolish All Courts-Not Fast-Ruler & Official Biased-Non Qualititaive-Non Cheaper-Not Simple Procedured, Not Punishing False Complainants. SIMPLY FIGHT FOR EVERY YEAR ELECTIONS-REPS WILL COMPEL GOVT OFFICIALS TO WORK FOR PEOPLE.

  • ரத்தினம் - Muscat,ஓமன்

    மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அரசுகளை தேச துரோக நடவடிக்கையாக கருதி டிஸ்மிஸ் செய்ய வேண்டும்.

Advertisement