Advertisement

வீராங்கால் கால்வாய் அடைப்பை தடுக்க ரூ.15 கோடி ஒதுக்கீடு

Share
சென்னை:வீராங்கால் கால்வாயில் அடைப்பு ஏற்படுவதை தடுக்க, 15 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
வேளச்சேரி ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீர், வேளச்சேரி விரைவு சாலையை ஒட்டி உள்ள, 2 கி.மீ., நீளம், 20 அடி அகலம் உடைய வீராங்கால் திறந்தவெளி கால்வாய் வழியாக, பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை அடைகிறது.வேளச்சேரியில், இரண்டடுக்கு மேம்பாலம் கட்டும் பணி நடப்பதால், அதற்கான சாலை விரிவாக்கத்திற்காக, 1 கி.மீ., நீளத்திற்கு, வீராங்கால் கால்வாயின் மேல் பகுதியில், கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டது.கால்வாய் ஒட்டிய பகுதியில், கடைகள் அதிகம் உள்ளன. பெரும்பாலான கடை உரிமையாளர்கள், குப்பையை கால்வாயில் கொட்டுவதால், அடைப்பு ஏற்படுகிறது.
இதை தடுக்க, மீதமுள்ள, 1 கி.மீ., துார கால்வாய் மீதும் கான்கிரீட் அமைக்க, நெடுஞ்சாலைத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால், வேளச்சேரி விரைவு சாலையின் அகலமும் அதிகரிக்கும்.இதற்காக, 15 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. கால்வாய்க்குள், குப்பை சேராத வகையில், கால்வாயில் கம்பி வலையும் அமைக்கப்பட உள்ளது. இதற்கான பணிகளை அடுத்த மாதம் துவக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement