Advertisement

மரக்கன்றுகள் வழங்கும் விழா

ராமநாதபுரம் : வள்ளுவன் அறக்கட்டளை சார்பில் ராமநாதபுரம் அரண்மனை முன்பிலிருந்து கலெக்டர் அலுவலகம் வரை சைக்கிளில் ஊர்வலமாக சென்று சமூக விழிப்புணர்வுக்காக மரக்கன்றுகள் வழங்கும் விழா நேற்று நடந்தது. ஒற்றைக்கால் சைக்கிள் சாதனையாளர் மணிகண்டன் தலைமையில் 50 இளைஞர்கள் சைக்கிள்களில் மரக்கன்றுகளுடன் மரம்வளர்ப்போம், மழை பெறுவோம் என்ற பதாகைகளுடன் ஊர்வலமாக சென்றனர். செல்லும் வழியில் பொதுமக்களுக்கு மரங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியும், மரக்கன்றுகளையும் வழங்கினர்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement