Advertisement

மண்டபத்தில் இளைஞர் விளையாட்டு மைதானம்

ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் அருகே மண்டபத்தில் அம்மா இளைஞர் விளையாட்டு மைதானம் திறக்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பேரூராட்சியில் அம்மா இளைஞர் விளையாட்டுமைதானம் அமைக்க கலெக்டர் வீரராகவராவ் உத்தரவிட்டார்.மண்டபம் தோணித்துறை கடற்கரை அருகில் கபடி, கிரிக்கெட், கைபந்து மைதானம், இளைஞருக்கான உடற்பயிற்சி கூடம அமைத்து, இளைஞர்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. இதனைபேரூராட்சிகள் உதவி இயக்குநர் ராஜா, பேரூராட்சி செயல் அலுவலர் மாலதி, பேரூராட்சி தலைமை எழுத்தர் முனியசாமி, மண்டபம் அ.தி.மு.க., நகர் செயலாளர் சீமான்மரைக்காயர் பார்வையிட்டனர்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement