Advertisement

ஐஸ் வைத்தால் தான் ஓட்ட முடியும்!

ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர், துணைத் தலைவர் தேர்வு, திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் நடந்தது. தலைவராக, அ.தி.மு.க., சார்பில், ஜெகதீசன் வெற்றி பெற்றார். துணைத் தலைவராக, தே.மு.தி.க.,வின் பிரசாத்குமார் தேர்வு செய்யப்பட்டார். பின் நடந்த கூட்டத்தில், தலைவர் ஜெகதீசன், 'மா.கம்யூ., மூத்த நிர்வாகி முத்துசாமி தான் நமக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். அவர் தலையிடும் போதே, எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்று எனக்கு தெரியும்; அதன்படி, துணைத் தலைவர் தேர்வும், சுமுகமாக நடந்து முடிந்துள்ளது. அனைவரது ஒத்துழைப்பாலும், ஐந்தாண்டுகளை சிறப்பாக முடிப்போம்' என்றார்.சக கவுன்சிலர் ஒருவர், 'இப்படி மார்க்சிஸ்ட் உறுப்பினரை, 'ஐஸ்' வைத்தால் தான், அஞ்சு வருஷத்தை ஓட்ட முடியும். இல்லைன்னா, தொட்டதுக்கெல்லாம் ஆர்ப்பாட்டம், மறியல்னு கம்யூனிஸ்ட் காரங்க களத்துல இறங்கிடுவாங்கல்ல' என முணுமுணுக்க, சக கவுன்சிலர்கள், அதை ஆமோதித்து தலையசைத்தனர்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • karutthu - nainital,இந்தியா

    இப்போதெல்லாம் கம்யூ ...கட்சி போராட்டங்களையெல்லாம் மக்கள் கண்டுகொள்வதில்லை .

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    முதலில் பிரசினை செய்பவர்களைத் தன்னைக்கட்ட வேண்டும் என்ற சூட்சுமம் தெரிந்தவர் பிழைத்துக்கொள்வார்

Advertisement