Advertisement

டவுட் தனபாலு

தி.மு.க., தலைவர் ஸ்டாலின்: தேசிய மக்கள்தொகை பதிவேடு மற்றும் குடிமக்கள் பதிவேடு தயாரிக்கும் பணியை, தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம் என, முதல்வர் இ.பி.எஸ்., அறிவிக்க வேண்டும். இல்லாவிடில், நாடே திரும்பிப் பார்க்கும் வகையில், மிகப் பெரிய போராட்டத்தை, தி.மு.க., நடத்தும்.'டவுட்' தனபாலு: இந்திய மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாத குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து, நீங்கள் துவக்கிய போராட்டம், நம் மாநிலத்தில் பிசுபிசுத்து வருகிறது. இதனால், மாநிலம், அமைதிக்கு திரும்பி விடுமோ என்ற அச்சத்தில், அடுத்த போராட்டத்திற்கு, தி.மு.க., தயாராகி வருகிறதோ என்ற, 'டவுட்'டை, உங்கள் அறிக்கை எழுப்புகிறது.
நடிகர் ரஜினிகாந்த்: காலம் கெட்டுப் போச்சு; சமுதாயம் கெட்டுப் போச்சு; அரசியல் கெட்டுப் போச்சு. எனவே, ஊடகங்களுக்கு நிறைய கடமைகள் உள்ளன. எது உண்மையோ, அதை மட்டுமே ஊடகங்கள் சொல்ல வேண்டும்.'டவுட்' தனபாலு: நீங்கள் சொல்வதைப் பார்த்தால், தமிழகத்தில், ஒட்டுமொத்த, 'சிஸ்டமும்' கெட்டுப் போய் விட்டது என்பது போல் உள்ளது. ஆனால், இப்படி, எல்லாமும் கெட்டுப் போன மாநிலத்தில், இந்த, 70 வயதிலும், ஆண்டுக்கு, மூன்று படங்களில், நீங்கள் ஏன் வீணாக நடித்து வருகிறீர்கள்? நீங்கள் சொல்வதைப் பார்த்தால், அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தலில் நீங்கள் போட்டியிட்டு, வெற்றி பெற்று, முதல்வராகி, ஒரே நாளில் அனைத்தையும் சரி செய்து விடுவீர்களோ என்ற, 'டவுட்'டும் ஏற்படுகிறது.
இ.பி.எஸ்., தமிழக முதல்வர்: கூட்டணியை பொறுத்தவரை, சில இடங்களில், விட்டுக் கொடுத்து செல்ல வேண்டிய சூழ்நிலை தான் ஏற்படுகிறது. எங்களைப் பொறுத்தவரை, மக்கள் தான் எஜமானர்கள். அவர்கள் தான் நீதிபதிகள். அவர்கள் சொல்லும்படி, எண்ணும்படி தான் எங்கள் அரசு செயல்படும். 'டவுட்' தனபாலு: 'பொறுத்தார் பூமி ஆள்வார்' என்ற பழமொழியை நிரூபிக்கும் வகையில், உங்களின் பதில் அமைந்துள்ளது. கூட்டணி கட்சித் தலைவர்கள் நெருக்கடி கொடுத்தாலும், அதை பெரிதுபடுத்தாதீர்கள் என, சக அமைச்சர்களுக்கு அறிவுரை கூறும்படியும் உள்ளது. அதே நேரத்தில், 'மக்கள் விருப்பப்படி தான் செயல்படுவோம்' என, நீங்கள் கூறியது, 'தி.மு.க.,வின் கோரிக்கைகளை எந்த சூழ்நிலையிலும் ஏற்க மாட்டோம்' என்பதை, 'டவுட்' இல்லாமல் உணர்த்துகிறது.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • karutthu - nainital,இந்தியா

    இப்படி எதற்கெடுத்தாலும் போராட்டம் செய்தால் மக்கள் அதை விரும்ப மாட்டார்கள் .அப்புறம் உங்க முதல்வர் கனவு கனவாகவே ஆகிவிடும் . ஏதாவது ஆக்க பூர்வமாக சிந்தித்து மக்களுக்கு ஜாதி வித்தியாசம் பார்க்காமல் கடமையை செய்தால் வரும்காலத்தில் முதல்வராகலாம் .

  • NATARAJAN - Coimbatore,இந்தியா

    தாத்தா ஏழு தலை முறைக்கு சேர்த்து வச்சிட்டு போய்ட்டாரு, வேறே என்ன வேலே கனவிலேயே மிதக்க வேண்டியதும் தான், குடும்ப கழகம் கப்பலேறி ரொம்ப வருஷம் ஆச்சு என்ன குரங்காட்டம் ஆடினாலும் மக்கள் குழம்ப மாட்டார்கள்

Advertisement