Advertisement

ரூ.2 கோடிக்கு பொங்கல் பொருட்கள் விற்பனை

வேலூர்: வேலூர், நேதாஜி மார்க்கெட்டில், இரண்டு கோடி ரூபாய்க்கு பொங்கல் பொருட்கள் விற்பனை நடந்தன. பொங்கல் பண்டிகையையொட்டி, வேலூர் நேதாஜி மார்க்கெட்டில், நேற்று ஏராளமானோர், பல்வேறு பொருட்களை வாங்கினர். பொங்கல் மண்பானை, 100 முதல், 200 ரூபாய் வரையும், ஒரு ஜோடி மஞ்சள் கிழங்கு, 50 ரூபாய், ஒரு ஜோடி கரும்பு, 60 முதல், 100 ரூபாய் வரையும், மற்றும் பூசணிக்காய், மொச்சக்காய், சர்க்கரை வள்ளிக்கிழங்கு, வண்ணப்பொடி, மாட்டு பொங்கலுக்கு தேவையான கொலுசு, கழுத்து மணி, நெற்றி மணி, மூக்கணாங்கயிறு, தலைக்கயிறு மற்றும் காய்கறிகள் போன்றவற்றை வாங்கினர். நேற்று, ஒரே நாளில், இரண்டு கோடி ரூபாய்க்கு பொங்கல் பொருட்கள் விற்பனை நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement