Advertisement

வியாபாரி மனைவியிடம் 3 பவுன் நகை பறிப்பு

வேலூர்: வேலூரில், நடந்து சென்ற பெண்ணிடம் மூன்று பவுன் செயினை பறித்தவர்கள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். வேலூர், காட்பாடியை சேர்ந்தவர் ராஜ்குமார், 32. மளிகை வியாபாரி. அவர் மனைவி மோனிஷா, 30. இவர் உறவினரை பார்க்க, சாய்நாதபுரத்திற்கு நேற்று காலை, 8:00 மணிக்கு நடந்து சென்றார். அப்போது பைக்கில் வந்த இரண்டு பேர், மோனிஷா கழுத்தில் அணிந்திருந்த மூன்று பவுன் நகையை பறித்துச்சென்றனர். புகாரின்படி, பாகாயம் போலீசார் விசாரிக்கின்றனர்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement