Advertisement

வில்லியம்பாக்கத்தில் அம்மா இளைஞர் விளையாட்டு திட்ட துவக்க விழா

செங்கல்பட்டு:செங்கல்பட்டு அடுத்த, வில்லியம்பாக்கம் ஊராட்சியில், தமிழக அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில், 'அம்மா' இளைஞர் விளையாட்டு திட்ட துவக்க விழா, மாவட்ட கலெக்டர் ஜான்லுாயிஸ், தலைமையில், நேற்று நடந்தது.


ஊரகத் தொழில் துறை அமைச்சர் பெஞ்சமின் பங்கேற்று, திட்டத்தை துவக்கி வைத்தார்.திட்ட இயக்குனர் ஸ்ரீதர், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் திருக்கழுக்குன்றம் ஆறுமுகம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். திறப்பு விழாவுக்கு பின், கிரிக்கெட், பூப்பந்து, கபடி, கைப்பந்து உள்ளிட்ட விளையாட்டுகளை, இளைஞர்கள் விளையாடினர்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement