Advertisement

நண்பர் கொலை ஆட்டோ ஓட்டுனர் கைது

Share
செங்கல்பட்டு: காட்டாங்கொளத்துாரில், நண்பரை கொலை செய்த, ஆட்டோ ஓட்டுனரை போலீசார், நேற்று, கைது செய்தனர்.

காட்டாங்கொளத்துார், மாதா கோவில் தெருவைச் சேர்ந்த கனகராஜ் மகன் குமார், 45; பெயின்டர். இவருக்கு, மனைவி பவானி, மகன், மகள் உள்ளனர்.குமாரும், அவரது நண்பர் சிவகுமார், 45, என்பவரும், அதே பகுதியில், ஒரு வீட்டில், 11ம் தேதி, மது அருந்தினர். அப்போது, போதையில் ஏற்பட்ட தகராறில், சிவகுமார், கத்தியால், குமாரை சரமாரியாக குத்தி கொலை செய்தார்.இது குறித்து, மறைமலை நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிவகுமாரை கைது செய்து, நேற்று, சிறையில் அடைத்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement