Advertisement

சிறுமி பலாத்காரம்: காமகொடூரன் கைது

Share
செங்கல்பட்டு:பொன்விளைந்தகளத்துாரில், பள்ளி மாணவியை, பலாத்காரம்செய்த, காமகொடூரனை போலீசார் கைது செய்தனர்.

செங்கல்பட்டு அடுத்த, பொன்விளைந்தகளத்துார் கிராமத்தைச் சேர்ந்தவர், 7 வயது சிறுமி. அங்குள்ள அரசு பள்ளியில், 2ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு, தெருவில் சிறுமி விளையாடினார்.அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திக், 39, என்பவர், சிறுமியை கடத்திச்சென்று, பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

இதில், பாதிக்கப்பட்ட சிறுமியை, பெற்றோர், செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை, குழந்தைகள் வார்டில், தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர்.இது குறித்து, சிறுமியின் பெற்றோர், செங்கல்பட்டு தாலுகா போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து, 'போக்சோ' சட்டத்தின் கீழ், கார்த்திக்கை கைது செய்து, மாவட்ட சிறையில் அடைத்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement