Advertisement

சுவரை தாண்டி மாங்காய் பறித்த யானை; சாம்பியாவில் கூத்து

Share
ல்யூசாகா : சாம்பியா நாட்டில் காட்டு யானை ஒன்று தங்கும் விடுதியின் சுவரை தாண்டி சென்று மாங்காய் பறித்த சம்பவம் தற்போது வைரலாகி வருகிறது.
பொதுவாக யானைகள் பெரும்பாலும் பழங்கள், புற்கள், இலை, தழைகள் என அதன் பசிக்கு ஏற்ப உண்ணும். ஆனால் சாம்பியா நாட்டின் ல்யூசாகா நகரத்தில் உள்ள தேசிய பூங்காவிற்கு அருகில் உள்ளது எம்புவே தங்கும் விடுதி. இங்கு காட்டு யானை ஒன்று தங்கும் விடுதியின் சுவரை தாண்டி சென்று உள்ளே வந்தது. இதனை கண்டு அங்கிருந்த சுற்றுலா பயணிகள் ஆச்சரியத்துடனும், ஒருவித பயத்துடனும் திகைத்து நின்றனர். அந்த யானை தனது கால்களை ஒவ்வொன்றாக எடுத்து வைத்து நிலை தடுமாறாமல் அந்த சுவரை தாண்டி சென்றதாக கூறப்படுகிறது. இந்த காட்சி அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக அந்த விடுதியின் மேலாளர் கூறுகையில், யானை நேர்த்தியாக உள்ளே வந்தது. யானையின் சமயோஜித புத்தியை கண்டு இங்கிருந்தவர்களுக்கு ஒரே ஆச்சரியம். யானை இங்குள்ள மாம்பழங்களை சாப்பிட வந்திருக்கலாம்.

மேலும் அது நிலைதடுமாறாமல் சுவரை தாண்டியதுடன், சில மாங்காய்களையும் பறித்து சென்றதாக சில ஊழியர்கள் கூறினர். இவ்வாறு பேசினார்.
யானை சுவரை தாண்டிய இந்த நிகழ்வு தற்போது வைரலாகி வருவதால் நெட்டிசன்கள் பலரும் இது தொடர்பாக கருத்துக்களை கூறி வருகின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (10)

  • oce - kadappa,இந்தியா

    தமிழ் மக்களின் அனைத்து வாழ்க்கை முறைகளிலும் தமிழ் மொழி முழு வளர்ச்சி பெற்றுள்ளது. இனி அதற்கென தனியாக புது எழுத்துக்கள் தேவை இல்லை. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழிலிருந்து பல மொழிகள் தோன்றி பெருகி விட்டன. தன்னையே பிரித்து கொடுத்த பெருமை தமிழுக்குள்ளது.

  • oce - kadappa,இந்தியா

    மனிதனின் அறிவில் பாதி அறிவு யானைக்கு உள்ளது. கோயில்களில் யானையை கட்டி வைத்தார்கள். நல்ல விஷயங்களுக்கு யானைகளை பழக்கி பயன்படுத்தினார்கள். அதனை கடவுளாகவும் வணங்கினார்கள். ஆனால் மதம் பிடித்தால் அதன் அறிவு மங்கி விடும்.

  • elakkumanan - Naifaru,மாலத்தீவு

    ஜாம்பியாவில் திமுக உறுப்பினர் சேர்க்கை ஆரம்பம்...கொள்கை விளக்க டீசர் பா இது...........................................................

  • Nathan - Hyderabad,இந்தியா

    ஆப்ரிக்க யானை, முரடு, அறிவு அதிகம் கிடையாது என்பார்கள், அதெல்லாம் இல்லை என தண்டி காண்பித்த பலே யானை. மேலும் சுவரை உடைக்காமல் போகவேண்டும் என்ற நாகரிக பத்தி இருப்பதால், மனித உரிமைகளை காக்கும் பண்பும் இருக்கு.

  • uthappa - san jose,யூ.எஸ்.ஏ

    சாம்பியா என்று ஒரு நாடா? தமிழ் மொழி சிறக்க சில புது எழுத்துக்கள் அவசியமாகிறது.வெறும் வீம்பு தமிழ் மக்களை தவறாக உச்சரிக்க வைக்குது.புதியன புகுதல் வளர்ச்சி.

Advertisement