காஷ்மீரில் பனிச்சரிவு : 4 ராணுவ வீரர்கள் உட்பட 9 பேர் பலி
ஸ்ரீநகர்: காஷ்மீரில் சில இடங்களில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 4 ராணுவ வீரர்கள் உட்பட 9 பேர் உயிரிழந்தனர். சிலர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
கடந்த சில நாட்களாக காஷ்மீரில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதனால், அங்கு பல மாவட்டங்களில் பனிச்சரிவு ஏற்படுகிறது. பாரமுல்லா மாவட்டத்தில் நேற்று(ஜன.,13) ஏற்பட்ட பனிச்சரிவில் இரண்டு இளம்பெண்கள் சிக்கினர். அவர்களை உள்ளூர் மக்கள் பத்திரமாக மீட்டனர்.
குப்வாரா மாவட்டம், மச்சில் செக்டார் பகுதியில் உள்ள ராணுவ முகாம், பனிச்சரிவில் சிக்கியது. இதில் 3 வீரர்கள் உயிரிழந்தனர். ஒருவரை காணவில்லை. ஒரு வீரர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
நவுகாம் செக்டார் பகுதியில் நேற்று(ஜன.,13) இரவு ஏற்பட்ட பனிச்சரிவில் ஒரு எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்தார். 6 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
கண்டர்பால் மாவட்டம், சோனமார்க் பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் பொது மக்கள் 5 பேர் உயிரிழந்தனர். 9 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
வாசகர் கருத்து (4)
வீர வணக்கங்கள் ராணுவத்தை சேர்ந்தது. அதை விட்டு யார் யாருக்கெல்லாமோ நமது அரசியல் வியாதிகள் அதை வைத்துக்கொண்டு திரிகிறார்கள்.
வேதனையா இருக்கு சார் நமது வீரர்கள் பாதுகாப்புடன் இருக்க இயற்கையை வேண்டுகிறேன்
இரங்கல்கள்
இவ்ளோகொடூரமான கொட்டும்பனிலேயே நாட்டைகாத்து தன்னுயிர் நீத்த வீரர்களுக்கு வந்தனம் பாவமாயிருக்கு ,