Advertisement

இந்தியா 255 ரன்: ஷிகர் தவான் அரைசதம்

Share
மும்பை: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 49.1 ஓவரில் 255 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஷிகர் தவான் மட்டும் அரைசதம் அடித்து கைகொடுத்தார்.
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகள் மோதும் முதல் போட்டி மும்பை, வான்கடே மைதானத்தில் நடக்கிறது. 'டாஸ்' வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் பின்ச், பீல்டிங் தேர்வு செய்தார்.இந்திய அணியில் ரோகித் சர்மா, ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், கோஹ்லி, ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷாப் பன்ட், ஜடேஜா, ஷர்துல் தாகூர், குல்தீப் யாதவ், முகமது ஷமி, பும்ரா இடம் பெற்றனர். ஆஸ்திரேலிய ஒருநாள் அணியில் லபுசேன் அறிமுக வாய்ப்பு பெற்றார்.
இந்திய அணியின் ரோகித் சர்மா 10 ரன் எடுத்தார். ஷிகர் தவான் 28 வது அரைசதம் அடித்தார். லோகேஷ் ராகுல் 47 ரன்னுக்கு அவுட்டானார். தவான் 74 ரன் எடுத்தார். கோஹ்லி 16, ஸ்ரேயாஸ் 4 ரன்னுக்கு ஏமாற்றினர்.
இந்திய அணி ஒருகட்டத்தில் 27 ஓவரில் 1 விக்கெட்டுக்கு 134 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்து 30 ரன் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது இந்தியா (164/5). இதன் பின் சரிவில் இருந்து இந்திய அணி மீளவே இல்லை. ஜடேஜா 25, ரிஷாப் பன்ட் 28 ரன்கள் எடுத்தனர். ஷர்துல் தாகூர் (13), குல்தீப் (17) நீடிக்கவில்லை. கடைசியில் ஷமி (10) அவுட்டாக, இந்திய அணி 49.1 ஓவரில் 255 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement