நான் ரூ.2000ஐ விட அதிக மதிப்புடையவன்: ஓவைசி பேச்சு
ஐதராபாத்: காங்கிரஸிடம் பணம் பெற்று எனக்கு ஓட்டளியுங்கள் என்றும், நான் ரூ.2000ஐ விட அதிக மதிப்புடையவன் என்றும் தெலுங்கானா உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தில் ஏஐஎம்ஐஎம்., தலைவர் ஓவைசி பேசியுள்ளார்.
தெலுங்கானா மாநிலத்தில் 120 நகராட்சி மற்றும் 10 மாநகராட்சிக்கான உள்ளாட்சி தேர்தல் இந்த மாத இறுதியில் நடக்கவிருக்கிறது. இதற்காக, காங்., கட்சியினர் ஓட்டுக்கு பணம் கொடுத்து வருவதாக லோக்சபா எம்.பி.,யும், ஏஐஎம்ஐஎம்., அமைப்பின் தலைவருமான அசாசுதீன் ஓவைசி குற்றம் சாட்டினார்.
தேர்தல் பிரசாரத்தில் அவர் பேசியதாவது:காங்கிரசாரிடம் அதிகமான பணம் உள்ளதால், அவர்களிடம் இருந்து பணத்தை பெற்றுக்கொள்ளுங்கள். அவர்களே உங்களுக்கு பணம் கொடுத்தால், வாங்கிக்கொண்டு, எனக்கு ஓட்டளியுங்கள். என்னுடைய விலை ரூ.2000க்கும் மேல் என்பதால் மக்களுக்கு கொடுக்கும் பணத்தின் விகிதத்தை உயர்த்துமாறு காங்கிரசிடம் சொல்கிறேன். ஏனெனில் நான் அதைவிட அதிக மதிப்புடையவன். இவ்வாறு ஓவைசி பேசினார்.
தெலுங்கானா மாநிலத்தில் 120 நகராட்சி மற்றும் 10 மாநகராட்சிக்கான உள்ளாட்சி தேர்தல் இந்த மாத இறுதியில் நடக்கவிருக்கிறது. இதற்காக, காங்., கட்சியினர் ஓட்டுக்கு பணம் கொடுத்து வருவதாக லோக்சபா எம்.பி.,யும், ஏஐஎம்ஐஎம்., அமைப்பின் தலைவருமான அசாசுதீன் ஓவைசி குற்றம் சாட்டினார்.

தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
வாசகர் கருத்து (24)
நீ எவ்ளோகோடீக்கு அதிபதியாக இருக்கலாம் ஆனால் உன் மனம் ஒரு செல்லாத நோட்டு தானயா
செல்லா காசு
ஒவைசி - நீயெல்லாம், செல்லாத பணத்துக்கு கூட சமம் ஆனவன் இல்லை. அப்படின்னா நீ ... சரிப்பட்டு வரமாட்ட
2001? his value. He is real dangerous to this country. People should realize.
கேவலமான பேச்சு...