போகி கொண்டாட்டம்: சென்னையில் காற்றுமாசு அதிகரிப்பு

போகி பண்டிகை அன்று பழைய பொருட்களை எரிப்பது வாடிக்கை. முன்னர், பழைய டயர்கள், பிளாஸ்டிக் ரப்பர் பொருட்கள் எரிக்கப்பட்டன. இதனால், காற்றுமாசு அதிகரித்தது. இதனை, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் விழிப்புணர்வு பிரசாரம் மற்றும் நடவடிக்கை காரணமாக கட்டுப்படுத்தி வருகிறது. தமிழகம் முழுவதும் போகி பண்டிகை இன்று(ஜன.,14) உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதனால், பல இடங்களில், பழைய பொருட்களை எரித்தனர். பனிமூட்டம் காரணமாக துகள்கள் கரையாமல் காற்றில் மாசு அதிகரித்தது.

சென்னையில் திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், அண்ணாசாலை, ஆலந்தூர் வேளச்சேரியில் அடையாறு உள்ளிட்ட பல இடங்களில்காற்றுமாசு அதிகரித்தது. காற்றில் புகை கலந்ததால் எதிரில் வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனிமூட்டம் புகைபோல் சூழ்ந்து காணப்பட்டது. வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகினர். முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி வாகனங்களை ஓட்டி சென்றனர்.

விமானங்கள் தாமதம்
கடும் பனிமூட்டம் காரணமாக சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் தரையிறங்குவதிலும், புறப்படுவதிலும் தாமதம் ஏற்பட்டது. 20 விமானங்கள் ஒரு மணி நேரம் தாமதமாக தரையிறக்கப்பட்டது. டில்லி, மும்பை உள்ளிட்ட ந கரங்களுக்கு செல்லும் வாகனங்கள் தாமதமாக கிளம்பின.
முதல்வர் இ.பி.எஸ்., சென்னையிலிருந்து சேலம் செல்ல திட்டமிட்டிருந்தார். ஆனால், கடும் புகைமூட்டம் காரணமாக 1.45 மணி நேரம் காத்திருந்து பின்னர் அவர் கிளம்பி சென்றார்.
வாசகர் கருத்து (10)
இந்த பண்டிகை பழைய காலத்துக்கு ஓகே இப்ப தீ ஏரிப்பது என்பது காற்று மாசு படுவதை தவிர்க்க வேண்டும்
பனிமூட்டம் காரணமாகத்தான் விமானங்கள் தாமதம். ராணிப்பேட்டையில் பார்க்கமுடியாத அளவுக்கு பனி.
ஆளாளுக்கு கருத்து சொல்ல வேண்டாம்.பனிமுட்டமே கரணம்.கற்களில் இருந்து புகை வருகிறது.காரை ஓடடாமல் இருக்கலாமே
என்ன வந்த சோதனை.... உலகத்துக்கே நாகரீகம் கற்றுத்தந்தவர்கள்
இதென்ன பிரமாதம், ஆஸ்திரேலியாவில் இதைவிட பலமடங்கு புகை மெல்போர்னில் மட்டும் 6 உயிர்கள் காவு.