dinamalar telegram
Advertisement

நிர்பயா குற்றவாளிகளுக்கு ஜன..22ல் தூக்கு உறுதி

Share
புதுடில்லி: 'நிர்பயா' வழக்கில், தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள நான்கு பேரில் வினய் குமார் சர்மா மற்றும் முகேஷ் சர்மா, தண்டனையிலிருந்து தப்பிக்க, கடைசி முயற்சியாக, உச்ச நீதிமன்றத்தில், தாக்கல் செய்த கியூரேட்டிவ் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதனையடுத்து, அவர்கள் ஜன.,22 காலை 7 மணிக்கு தூக்கில் போடுவது உறுதியாகியுள்ளது.

டில்லியில், 2012ல், 23 வயதான 'நிர்பயா' மருத்துவ மாணவி, ஓடும் பஸ்சில், ஆறு பேர் கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டு, தூக்கி வீசப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில், சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அந்த மாணவி இறந்தார். இந்த சம்பவம் தொடர்பாக, 16 வயது சிறுவன் உட்பட, ஆறு பேரை, போலீசார் கைது செய்தனர். இதில், சிறுவனுக்கு மட்டும், சிறார் சட்டப்படி, மூன்றாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. டில்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த, மற்ற ஐந்து பேரில், ராம் சிங் என்பவர், துாக்கு மாட்டி தற்கொலை செய்தார்.

மற்ற நால்வருக்கும், விசாரணை நீதிமன்றம் விதித்த தூக்கு தண்டனையை, டில்லி உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தன. இதை எதிர்த்து, நான்கு பேரும் தாக்கல் செய்த சீராய்வு மனுக்களை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. நான்கு பேருக்கும், வரும், 22ம் தேதி காலை, 7:00 மணிக்கு, திஹார் சிறையில் தூக்கு தண்டனையை நிறைவேற்ற, டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள நான்கு பேரில் முகேஷ் மற்றும் வினய் குமார் சர்மா ஆகியோர், தண்டனையிலிருந்து தப்பிக்க, கடைசி முயற்சியாக, 'கியூரேட்டிவ்' மனு எனப்படும், குறை தீர் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை இன்று(ஜன.,14) உச்சநீதிமன்றத்தின் என்வி ரமணா, அருண் மிஸ்ரா, ஆர்எப் நாரிமன், ஆர்.பானுமதி மற்றும் அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய 5 நீதிபதிகள், அந்த மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். இதனையடுத்து, 4 பேரும் வரும் 22ம் தேதி காலை 7 மணிக்கு தூக்கில் போடுவது உறுதியாகியுள்ளது.

முக்கியமானநாள்இது தொடர்பாக ' நிர்பயா' வின் தாயார் ஆஷா தேவி கூறுகையில், இன்று முக்கியமானநாள். இதற்காக 7 ஆண்டுகளாக காத்திருந்தேன். குற்றவாளிகள் தூக்கில் போடும் போது, அது எனக்கு மிகவும் முக்கியமான நாளாக அமையும். இவ்வாறு அவர் கூறினார்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (25)

 • நந்தினி திவ்ய பாரதி - MELBOURNE,ஆஸ்திரேலியா

  இன்னிக்கீதா அவங்ல கொள்ளு போடணும். போடலியம்மா

 • Sanny - sydney,ஆஸ்திரேலியா

  ஏண்டா சாகுறது தான் சாகப்போறிங்க, எதுக்குடா உங்க குடும்பம் வீணாக வக்கீலுக்கு செலவுசெய்து பெற்றோருக்கு கடனை வைத்துவிட்டு சாகப்போறிங்க. நீங்க செத்தபிறகாவது அவங்க நின்மதியாக இருக்கட்டும்.

 • Kalam - Salem,இந்தியா

  அது என்ன ரெண்டு பேரோட சீராய்வு மனு மட்டும் தள்ளுபடி ?

 • கொடுக்கு - Ang Mo Kio ,சிங்கப்பூர்

  சீக்கிரம் தூக்குல போட்டு தொலைங்க . இல்லேன்னா . ஓடிப்போய் பாஜகவுல சேர்ந்து தப்பிச்சுரப்போறானுக

 • skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா

  பாவம் அந்தப்பொண்ணுப்பாட்ட அவலம் அவஸ்தைகளை நல்ல தீர்ப்பு லேட்டாக வந்துருக்கு வந்துதே என்று மிக்க மகிழ்சச்சியாக இருக்கு எவ்ளோ துடிச்ச் u செத்துருக்கா இந்த கம்மினாட்டிகளுக்கு இவ்ளோனால் சோறுபோட்டது வேஸ்டுங்க மாபெரும் தப்பு தூக்கிலேபோடுறதை பப்லிக்க போடணும் அசாலப்பொண்ணை தொடவே பயம் வரணும் எல்லா ரேஸ்கள்களுக்கும் கிளாமரன் சொல்லிண்டு அரைகுறையா திரியும் பொண்ணுகளை ப்ளீஸ் தண்டிக்கவேண்டும் நம்ம நாட்டுக்கு இந்த அசிங்கமான கல்ச்சர் தேவையே இல்லே . சினிமாக்காரிகள்காட்டினால் அவ்ளோக்கும் துட்டுவாங்கிர்ராளுக கொடியே வெட்கமே இல்லாமல் சாமானியன் ஊட்டு பொன்னுக்காட்டினால் கற்பு போவும்+உசிரும்

Advertisement