Advertisement

முடிகிறதா தேனிலவு?: பாஜ - அதிமுக உரசல்

இந்த செய்தியை கேட்க

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: அதிமுக மற்றும் பா.ஜ., இடையே சுமூகமாக இருந்த கூட்டணியில், சமீப நாட்களாக விரிசல் ஏற்பட்டுள்ளது.

உள்ளாட்சி தேர்தலில் இருந்து, தமிழக அரசை முன்னாள் மத்திய அமைச்சரும் பா.ஜ.,மூத்த தலைவருமான பொன்.ராதாகிருஷ்ணன் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார். இதற்கு தமிழக அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

தனித்து போட்டிஉள்ளாட்சி தேர்தல் முடிவுகள் தொடர்பாக பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில், பா.ஜ., தனித்து போட்டியிட்டிருந்தால், அதிக இடங்களில் வெற்றி பெற்றிருக்கும். நாங்கள் அதிக இடங்களில் போட்டியிட்டு இருக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்கும். கூட்டணியில் இடம்பெற்றிருந்ததால், நாங்கள் போட்டியிட விரும்பிய அளவிற்கான பதவி, இடங்கள் கிடைக்கவில்லை எனக்கூறியிருந்தார்.
இரு கட்சிகளிலும் முதலி்ல் கொளுத்திப் போட்டவர் இவர் தான். அதன் பிறகு பிரச்னை பற்றிக்கொண்டது.

பதிலடிஇது தொடர்பாக அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறுகையில், அனைத்து கட்சிகளுமே தனித்து போட்டியிட வேண்டும். அப்போது தான் ஒவ்வொரு கட்சியின் தனி பலம் தெரியவரும் என்றார்.

யார் கருத்துஅமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறுகையில், பொன்ராதாகிருஷ்ணன் கருத்து, அவருடைய கருத்தா? கட்சியின் கருத்தா? என்று தெரியவில்லை. எங்களை பொறுத்தவரையில் கூட்டணியில் இருந்து கொண்டு இதுபோல பேசுவது கூட்டணி தர்மத்திற்கு அழகல்ல' என்றார்.

பயங்கரவாதிகள் கூடாரம்

இதனிடையே அரியலூரில் நடந்த நிகழ்ச்சிக்கு பின் மீண்டும் பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில், சிறுபான்மையினர் ஓட்டுக்காக அரசியல்வாதிகள் கீழ்த்தரமான வேலையை செய்ய துவங்கியிருக்கின்றனர். திமுக கூட்டணி கட்சிகளோடு பயங்கரவாதிகள் கூட்டணி வைத்திருக்கிறார்கள். இதற்கு திமுக விளக்கம் அளிக்க வேண்டும்.
பயங்கரவாதிகளின் கூடாரமாக தமிழகம் மாறிவிட்டது என்பதை ஜெயலலிதா ஆட்சி காலத்திலிருந்தே கூறி வருகிறேன். கேரளா, குஜராத், டில்லி, தமிழகம் உள்ளிட்ட பல இடங்களில் தமிழகத்தை சேர்ந்த பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளது எனது கருத்தை உறுதிப்படுத்தியுள்ளது. இதைக் கட்டுப்படுத்த தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என கேள்வி எழுப்பியிருந்தார்.

கோபம் ஏன்இந்த குற்றச்சாட்டு தொடர்பாக சென்னையில் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், தாம் சார்ந்த கட்சியில் பதவி கிடைக்காத கோபத்தை எங்கள் மீது பொன்.ராதாகிருஷ்ணன் திருப்புவது ஏன்? மத்திய அமைச்சராக இருந்த அவர், தமிழகத்திற்கு என்ன திட்டங்களை கொண்டு வந்தார். சட்டம் ஒழுங்கு உட்பட பல்வேறு துறைகளில் தமிழகம் சிறந்து விளங்குகிறது.

மத்திய அரசு விருதுகள் அளித்து வரும் நிலையில், அவரின் கருத்து ஏற்புடையது அல்ல. மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர், தமிழக அரசு நிர்வாகத்தை பாராட்டும் நிலையில், தவறான கருத்துகள் மூலம் பொன்.ராதாகிருஷ்ணன் மத்திய பா.ஜ., அரசை எதிர்க்கிறாரா? எனக் கேள்வி எழுப்பினார்.

இப்படி மாறி மாறி இரு கட்சி தலைவர்களும் ஒருவர் மீது ஒருவர் பாய்வது, கூட்டணிக்கு வேட்டு வைத்து விடுமோ என்ற அச்சத்தை அக்கட்சியினருக்கு ஏறு்படுத்தி உள்ளது..

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (64)

 • Sampath Kumar - chennai,இந்தியா

  தேன் நிலவு முடிச்சுருச்சா ?? எப்ப கல்யாணம் ஆச்சு ?? சொல்வே இல்லை

 • Rajas - chennai,இந்தியா

  மற்ற வட இந்திய கட்சிகளை போல இல்லாமல் இவர்கள் சரியாக கார்னர் செய்கிறார்கள். ஆய்வுக்கு போயே தீருவேன் என்ற கவர்னரை எப்படி சைலண்டாக உட்கார வைத்தார்கள்.

 • Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா

  உண்மை அதுதான்.தனித்து போட்டியிட்டு இருந்தால் பாஜக வுக்கு அதிக இடம் கிடைத்திருக்கும். திருட்டு கூட்டம் தேவையான இடங்களில் போட்டியிட வாய்ப்பு அளிக்கவில்லை

  • வெற்றிக்கொடி கட்டு - TAMIL NADU,இந்தியா

   சீ சீ இந்த aADMK புளிக்கும்

 • natarajan s - chennai,இந்தியா

  தமிழ்நாட்டு அரசியல் உள்ளாட்சி தேர்தலுக்கு பின் புரியவே இல்லையே , திமுக காங்கிரஸ் உரசல், பிஜேபி அதிமுக மோதல், என்ன நடக்குது இங்கு ?

 • Bhagat Singh Dasan - Chennai,இந்தியா

  என்னது அவர் அமைச்சராக எந்த திட்டம் கொண்டுவந்தாரா வா? கன்னியாகுமாரி மாவட்டத்தில் போய் பாருங்கள், மீனவர்களிடம் கேளுங்கள், அவர் இருந்த வரை அவர்களுக்கு அரணாக இருந்தவர்

  • Selvaraj - Nagercoil,இந்தியா

   அது யாருப்பா சென்னையில இருத்துட்டு கன்னியாகுமாரி மாவட்டத்தைப்பற்றி அடிச்சி விடுறது. அதுதான் okki புயல் பாதித்த இடங்களை பொன்னார் இன்னும் பார்வையிடவில்லை என மீனவ சமுதாயம் அவருடைய பிரச்சார வாகனங்களை திருப்பிஅனுப்பியதெல்லாம் நினைவில்லயா ??

Advertisement