dinamalar telegram
Advertisement

இந்திய பாரம்பரியத்தால் கட்டமைக்கப்பட்டேன்: சிஏஏ பற்றி நாதெல்லா கருத்து

Share

Audio இந்த செய்தியை கேட்க

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: குடியுரிமை திருத்த சட்டம் குறித்து, மைக்ரோசாட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சத்யநாதெல்லா தனது கருத்தை தெரிவித்துள்ளார்.


மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சத்யநாதெல்லா கூறியதாக Bussfeed news நிறுவனத்தின் தலைமை ஆசிரியர் பென் ஸ்மத் டுவிட்டிரல் வெளியிட்ட பதிவில், '' என்ன நடக்கிறது என்பதை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது. இது மிக மோசமானது.

வங்கதேசத்தில் இருந்து புலம்பெயர்ந்து இந்தியாவிற்கு வந்து பெரிய சாதனையாளராகவோ அல்லது இன்போசிஸ் போன்ற நிறுவனத்தின் அடுத்த தலைமை செயல் அதிகாரியாகவோ வர உள்ள ஒருவரை நான் காண விரும்புகிறேன்'' என பதிவிட்டிருந்தார்.

இதனையடுத்து மைக்ரோசாப்ட் இந்தியா சார்பாக நாதெல்லா அறிக்கையை வெளியிட்டுள்ளது.
டுவிட்டரில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ஒவ்வொரு நாடும் தனது எல்லையை வரையறுத்து, தேச நலன்களை பாதுகாக்க வேண்டும் அதற்கேற்றவாறு, குடியேற்ற கொள்கையை உறுதி செய்யும். ஜனநாயக நாட்டில், மக்களும், அரசாங்கங்களும் விவாதித்து, எல்லைகளை வரையறை செய்வார்கள். நான் எனது இந்திய பாரம்பரியத்தால், கட்டமைக்கப்பட்டுள்ளேன். பல கலாசாரங்கள் நிலவும் இந்தியாவில் வளர்ந்துள்ளேன்.

அமெரிக்காவிற்கு புலம்பெயர்ந்த அனுபவமும் எனக்கு உள்ளது. புலம்பெயர்ந்த ஒருவர், ஒரு வளமான தொடக்கத்தை கண்டுபிடிக்க வேண்டும். அல்லது இந்திய சமுதாயத்திற்கும் பொருளாதாரத்திற்கும் பெருமளவில் பங்களிக்கும் ஒரு பன்னாட்டு நிறுவனத்தை வழிநடத்த விரும்பும் இந்தியனாக இருப்பதே எனது நம்பிக்கை. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (94)

 • Sampath Kumar - chennai,இந்தியா

  கைப்புள்ள ரொம்ப சரியா சொன்னீங்க

 • Sridhar - Jakarta,இந்தோனேசியா

  மைக்ரோசாப்ட் போன்ற பெரிய நிறுவனத்தை நிர்வகிக்க தெரிந்தாலும், இவன் எப்பொழுது அமெரிக்க குடியுரிமை பெற்றானோ, அப்போதே அவனுடைய நாட்டுப்பற்று தீர்மானமாகியது. இத்தனைக்கும் இவனுடைய தந்தை ஒரு அரசு உயர் அதிகாரி, பிரதமர் வரை தொடர்பு உள்ள குடும்பம் நினைத்திருந்தால், இவனுக்கு இங்கேயே ஒரு நல்ல வேலையோ அல்லது ஒரு சொந்த கம்பெனி நிறுவவோ வாய்ப்புகள் அதிகம் இருந்தும், நாட்டை விட்டு ஓடி அந்நியனுக்கு உழைத்ததோடு இல்லாமல் நம் நாட்டின் குடியுரிமையும் துறந்திருக்கிறான் இவன் கூற்றுக்கு ஒரு மதிப்பும் இல்லை.

 • Viswam - Mumbai,இந்தியா

  அமெரிக்காவுல உள்ள போகறதுக்கு உண்டான பாலிசி வழியா போயிட்டு (ஒழுங்கு மரியாதையா விசா வாங்கி வேலை பார்த்து, மெதுவா கிறீன் கார்டு வாங்கி ) செட்டில் ஆனா மாதிரி இங்கேயும் அதே சட்டதிட்டத்திற்கு உள்பட்டு வந்தா நாடெல்லா சொல்லறது சரி . ஆனால் பார்டர் வழியா தப்பிக்குதிச்சு உள்ள வந்தவனுக்கெல்லாம் அடைக்கலம் எப்படி குடுக்க முடியும்? அவனெல்லாம் எப்படி இம்மிகிரேண்ட் ஆக முடியும் ? இந்த கூத்துல திருட்டுத்தனமா வந்தவன் ஒரு இந்திய கம்பனிக்கு தலைவர் ஆக எப்படி ஆக முடியும் ? உலகத்துலயே பெரிய நிறுவனமான மைக்கிரோசாப்ட்டு தலைவர் நாடெல்லா எதையும் பார்த்து புரிஞ்சுகிட்டு பேசினால் தேவலை

 • madurai kaipulla - melbourne,ஆஸ்திரேலியா

  ஒவ்வொரு நாடும் தன்னுடைய நாட்டில் பலதரப்பட்ட, பல இனம் சார்ந்த மக்களுக்கு வேலை வாய்ப்பு தரும்போது, அவர்களை குடி மக்களாக ஏற்று கொள்ளும் போது, நாம் ஏன் பிற்போக்கு தனமாக யோசிக்கிறோம். இந்தியாவுக்குள்ளும், இந்தியாவுக்கு வெளியேயும், மக்கள் பிழைப்புக்காக, நல்ல வேலை வாய்ப்புக்களுக்காக மக்கள் மற்ற நாட்டு குடிமக்களை விட அதிகமாக இடம் பெயர்கிறார்கள். இங்கு கருத்து சொல்லும் பல நண்பர்கள் கிறிஸ்துவ இஸ்லாமிய ஆப்பிரிக்கா, புத்த மத நாடுகளில் வேலை பார்க்கிறார்கள். நாம் பிழைப்புக்காக, நல்ல வாய்ப்புகளுக்காக இந்த நாடுகளை மறுப்பதில்லை, வெறுப்பதில்லை, அந்த மத/கலாசார மக்களை வெறுப்பதில்லை. ஆனால், நம் நாட்டில் அவர்களை, ஏன் வேறு மாநிலத்தவரை கூட ஏற்பதில்லை. ஆனால் நாம் வெளிநாடுகளுக்கு போக வேண்டும், அந்த மக்கள் நம்மை ஏற்று கொள்ள வேண்டும், அந்த நாடு வளங்களை நாம் பயன் படுத்திக் கொள்ள வேண்டும். ஆனால் நாம் வேரு ஒருவரை நாம் நம் நாட்டில் ஏற்று கொள்ள மாட்டோம். என்ன ஒரு முரண்பாடு. மத்திய கிழக்கு, மேற்கத்திய நாடுகள் இந்தியாவில் இருந்து வரும் ஒரு இஸ்லாமியரையோ இல்லை கிருத்துவரையோ தான் வேலையில் எடுப்போம், மற்றவர்கள் எல்லாம் உங்களுடைய இந்தியாவுக்கு திரும்புங்கள் என்றால், நீங்கள் ஏற்று கொள்ளுவீர்களா? இந்த அரசாங்கம் அப்படி திரும்ப வருவோரை ஏற்று கொள்ளுமா? ஒரு இந்திரா நூயி, ஒரு சுந்தர் பிச்சை, ஒரு சத்யா நாடெல்லா எல்லோரும் ஒரு அமெரிக்கா நிறுவனத்துக்கு தலைமை தாங்கும் அளவுக்கு, அந்த நாடுகளில் ஏற்று கொள்ளப்டுகிறார்கள். அதை தான் சத்திய சொல்லி இருக்கிறார். புலம் பெயல்வது நிதர்சனம் . மற்ற நாடுகள் ஏற்று கொண்டு விட்டன. ஆனால் நாம்? நாம் போகலாம் வெளிநாடுகளுக்கு, வெளி மாநிலங்களுக்கு, நல்ல வாழ்க்கைக்காக , பிழைப்புக்காக. ஆனால் வேறு ஒருவரை நாம் ஏற்று கொள்ள மாட்டோம். இது ஒரு முரண்பாடான, நடைமுறைக்கு ஒத்து வராத ஒரு சித்தாந்தம்

 • Uthiran - chennai,இந்தியா

  இப்படி ஒரு ட்வீட் வரும் வரை இவர் ஒரு நல்ல புத்திசாலி, எதையும் தீர்க்கமாக ஆராய்ந்து கருத்து சொல்பவர் என்று நினைத்திருந்தேன். சட்டபூர்வமாக குடியுரிமை பெறுபவர்களுக்கும் சட்ட விரோதமாக ஊடுருவி பயங்கரவாதத்தை வளர்பவர்களுக்கும் உள்ள வேறுபாடு தெரிந்திருக்கும் என்று நினைத்தேன்.. பில்கேட்ஸ் உருவாக்கிய கம்பெனிக்கு இப்படி ஒரு தலைமை நிர்வாகி என்பது பரிதாபம்தான்.

Advertisement