dinamalar telegram
Advertisement

குடியுரிமை சட்டம்: கோர்ட்டுக்கு செல்கிறது கேரளா

Share

Audio இந்த செய்தியை கேட்க

Your browser doesn’t support HTML5 audio

திருவனந்தபுரம்: குடியுரிமை சட்டத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டுக்கு செல்ல கேரள அரசு முடிவு செய்துள்ளது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத்தை மேற்குவங்கம், கேரளா , மற்றும் எதிர்கட்சிகள் ஆளும் மாநிலத்தில் அமல்படுத்த மாட்டோம் என அடம் பிடித்து வருகின்றன.குறிப்பாக மேற்குவங்க முதல்வர் மம்தா வீதிக்கு வந்து போராட்டம் நடத்தி வருகிறார். இடதுசாரி ஆளும் கேரள முதல்வர் பினராயி விஜயன் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.இந்நிலையில் இந்த சட்டம் அரசியலமைப்புக்கு எதிரானது இதனை ஏற்க இயலாது. இதற்கு மாநில சுதந்திர தலையீட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டை நாட கேரள அரசு முடிவு செய்துள்ளது.


குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கேரளா முதன்முதலில் செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (93)

 • வெற்றிக்கொடி கட்டு - CHENNA,இந்தியா

  இங்கே சிகாமணிஎன்பவர் சிந்தினமணி மணி மாதிரி பக்கம் பக்கமா கருத்து எழுதுவார் அனால் அது அந்த பரிட்சையில் இரண்டு மார்க்குக்கு கேட்ட கேள்விக்கு என்று அவருக்கு பின்னர் தான் தெரியும் அதை போலத்தான் இவர் தெரிவித்த கருத்துக்கும் CAA NCR NPR இதை எதிர்த்து கோர்ட்டுக்கு போவதிருக்கும் என்ன சம்பந்தம் சொல்லுங்கள்

 • Sampath Kumar - chennai,இந்தியா

  கிரிதர் ஸ்ரீனிவாசன் உச்ச நீதி மன்றம் ஏன்றால் என்ன ? மக்கள் என்றால் என்ன ? மக்களுக்கு ஆக நீதி மன்றம ? நீதி மன்றத்துக்கு ஆக மக்களா ? ஜனநாயக நாட்டில் மக்களே தலையானவர்கள் அவர்கள் கருத்தை கேட்டால் ஆக வேண்டும் அப்பதான் ஜனநாயகம் நிலைக்கும்

 • Giridharan Srinivasan - Chennai,இந்தியா

  கேரளா அரசு மட்டுமில்லை எந்த ஒரு மாநில அரசும், நம் ஜனாதிபதியின் [கையெழுத்துடன்] ஒப்புதலுடன் அமல்படுத்தப்பட்டுள்ள குடியுரிமை சட்டத்தை, உச்ச நீதிமன்றத்துக்கு சென்றாலும், ஒன்றும் செய்யமுடியாது. காரணம், நம் அரசியல் அமைப்பு சட்டப்படி, உச்ச நீதிமன்றத்தின் தலையாய கடமை, ஜனாதிபதியின் அரசாணையை மதித்து சட்டம் முறையாக அமல்படுத்தப்பட்டுள்ளதா என்பதை உறுதி படுத்துவதானே தவிர, ஜனாதிபதி கையெழுத்து இட்டு ஒப்புதல் அளித்த சட்டத்தை ரத்து செய்ய உச்ச நீதிமன்றத்துக்கு எந்த ஒரு அதிகாரமுமில்லை. இதை முதலில் நம் தலைமை நீதிபதி தன் மனதில் நிறுத்திக்கொள்ள வேண்டும். நம் தலைமை நீதிபதிக்கு பதவிப்பிரமாணம் செய்துவைப்பதே நம் ஜனாதிபதி தான் என்பதையும், அப்பொழுது சம்பந்தப்பட்ட நபர் தலைமை நீதிபதி பதவியையேற்கும் பொழுது, நம் நாட்டின் சட்டங்களை மதித்து, நம் அரசாங்கத்துக்கு விரோதமாக எந்த ஒரு செயலையும் செய்யமாட்டேன் என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டு தான் தலைமை நீதிபதி பதவியில் அமருகிறார். ஆகவே தலைமை நீதிபதி என்பவர் நம் ஜனாதிபதியின் கட்டளைக்கு அடிபணிந்து நடக்கவேண்டியவர், நடக்கவேண்டும். அதாவது தலைமை நீதிபதிக்கு வானளாவிய அதிகாரம் கிடையாது. ஆகையால் அவர் தான்தோன்றித்தனமாக எந்த ஒரு செயலையும் செய்யமுடியாது. அதே போல் தலைமை நீதிபதி, உச்ச நீதிமன்றத்தில் உள்ள ஒரு சில அல்லது எல்லா நீதிபதிகளுடன் சேர்ந்து நம் ஜனாதிபதி கையெழுத்திட்டு ஒப்புதல் அளித்த ஒரு சட்டத்தை செல்லாது என்று அறிவிக்க அல்லது ரத்து செய்ய ஒருபொழுதும் முடியாது. இவை எல்லாவற்றையும் நம் அரசியில் அமைப்பு சட்டத்தை நம் தலைமை நீதிபதி முதலில் நன்கு கவனத்தில் வைத்துக்கொண்டு கேரள அரசு மட்டுமில்லை, மத்திய பிரதேச அரசோ, மேற்குவங்க அரசோ, புதுச்சேரி அரசோ,.....எந்த ஒரு அரசும் நம் ஜனாதிபதி கையெழுத்து இட்டு ஒப்புதல் அளித்த சட்டத்தை ரத்து செய்ய சொல்லி / செல்லாது என்று அறிவிக்க சொல்லி மனு தாக்கல் செய்யதால், அந்த மனுவை முதலிலேயே தள்ளுபடி செய்ய வேண்டும்.

 • RajanRajan - kerala,இந்தியா

  சபரிமலை விவகாரத்தை கையிலெடுத்து கை பொள்ளி போன காம்ரேடுகள் இந்த குடியுரிமை விவகாரத்திலும் மண்ணை கவ்வ போகிறது. காம்ரேடுகளுக்கு இனி அழிவு காலம் தான். போய்கடோ.

 • மனுநீதி-என் சொந்த பெயர் ராஜா - Chennai,இந்தியா

  கேரளத்தின், மேற்கு வங்கத்தின் மண்ணின் மைந்தர்களை பிழைப்புக்கு வழியில்லாமல் செய்து ஊரை விட்டு துரத்திவிட்டு இன்று கம்யூனிஸ்டுகள் ஓட்டு போடுவதற்கு ஆள் இல்லாமல் தேடிக்கொண்டுவந்து இருப்பவர்களே இந்த ஊடுருவல்காரர்கள். இந்திய அரசும், நீதி மன்றமும் இது போன்ற அற்ப புத்தி அரசியல்வாதிகளின் அழுத்தத்திற்கு அடி பணியாமல் இந்திய மக்களின் நலன் கருதி இந்த சட்டத்தை அமல் படுத்தவேண்டும்.

Advertisement