dinamalar telegram
Advertisement

வறண்ட மண்ணில் வரலாற்று மழை; மிதந்த கார்கள்- அரிய படங்கள்

Share
துபாய்: வறண்ட பூமியான ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 3 நாட்களாக பெய்த பலத்த மழையில் முக்கிய நகரங்கள் சார்ஜா, துபாய், அபுசகாரா, புர்ஜ்கலிபா, உள்ளிட்ட பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன.

பனியால் வாட்டி வந்த இந்நகரில் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு வரலாற்றில் இல்லாத இடி , மின்னலுடன் பலத்த மழை பெய்துள்ளதால் நகர இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் நிறுத்தப்பட்ட வாகனங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News

இந்த மழை காரணமாக அந்நாட்டு மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதன் காரணமாக விவசாயம் பலன் பெறும் என அந்நாட்டு அமைச்சர் தானி அஹம்மது அல்சயாதி கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில்: பருவகால மாற்றம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. சமீபத்தில் பனியால் பாதித்து இருந்தோம் . தற்போது திடீர் மழை மகிழ்ச்சி அளிக்கிறது.

இது காலநிலை மாற்றம் மற்றும் மேககூட்டங்களின் கலவை காரணமாக மழை பெய்துள்ளது. இந்த இயற்கை வரவை நாட்டின் வளத்திற்கு உதவியாக செயல்படுத்துவோம். இன்னும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. என கூறினார்.

கடந்த 1996ஆம் ஆண்டு அல் ஐன் பகுதியில் 144 மி.மீ மழை பெய்தது. இந்த பொழிவுக்கு பின்னர் தற்போதுதான் அமீரகத்தில் பலத்த கனமழை பெய்துள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (11)

 • Muthukrishnan,Ram - Chidambaram,இந்தியா

  இதிலிருந்து என்ன தெரிகிறது. பாலைவனத்தில் விவசாயம் செய்ய வாய்ப்பு கிடைத்தால் அங்க இனிமேல் பெட்ரோல் வராது. அதன் அடிப்படையில் தீர்க்க ரேகை, மகரரேகையை வைத்து கணக்கு பார்த்தால் குறிப்பாக வட இந்தியாவில் பெட்ரோல் வளம் உண்டாகும். அகங்காராம் கொண்ட அராபியர்கள் நம் நாட்டில் வந்து வேலை செய்து ஜிவிக்க வேண்டிய காலம் மிக அருகாமையில் உள்ளது. நம் நாடு வல்லரசு ஆவதை இனி எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது. மோடிஜி அவர்களே சிந்தித்தது செயலாற்றுங்கள் வெற்றி நமதே.

 • natarajan s - chennai,இந்தியா

  பொதுவாகவே cloud seeding செய்த பின் ஒரு வறட்சி ஏற்பட்டு விடும் என்பார்கள், இவர்களுக்கு அது பற்றி கவலை இல்லை, இவர்கள் பூமியே வறட்சிதான், அதானல் இந்த மழையை வரவேற்கிறார்கள்,

 • Loganathan Kuttuva - Madurai,இந்தியா

  சாலைகளில் வெள்ளம் வந்து கார்கள் தண்ணீரில் இருந்தாலும் அங்குள்ளவர்கள் மழையை வரவேற்று மகிழ்ச்சி அடைகிறார்கள் .இங்கு போன்று சேதத்தை மட்டும் தெரிவிக்கவில்லை.

 • Prakash - Dubai,இந்தியா

  இது இயற்கையாக பெய்த மழை அல்ல, மேக கூட்டங்களை சேகரித்து அதில் இருந்த செயற்கையாக உருவாக்கபட்ட மழை. இவர்களால் எப்போது வேண்டும் ஆனாலும் மழை வரவழைக்க முடியும். பாலைவனத்தில் மழை வெள்ளம், பனி பொழிவு, பார்க்கவே ஆனந்தமாய் உள்ளது... புதிய கண்டுபிடிப்புகள் இது மாதிரி பலன் தர கூடியவையாக இருக்க வேண்டும் என்பதற்கு அமீரகம் ஒரு நல்ல எடுத்துக்காட்டு ... நன்றி ...

 • Nethiadi - Thiruvarur,இந்தியா

  வறண்ட பூமி என்று சொல்வதற்கு பதிலா,பல பேர் பசிக்கு வேலைவாய்ப்பு கல்வி பொருளாதாரம் கொடுக்கும் நிறைஞ்ச பூமி ன்னு சொல்லுங்கப்பா.

Advertisement