டில்லியில் இன்று துவங்குகிறது ரெய்ஸினா டயலாக் -2020
இந்த செய்தியை கேட்க
Your browser doesn’t support HTML5 audio
புதுடில்லி: புதுடில்லியில் ரெய்ஸினா டயலாக் 2020 என்ற பெயரில் ரஷ்யா, ஈரான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட 13 நாடுகளைச் சேர்ந்த வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பங்கேற்கும் வருடாந்திர புவி பொருளாதார உச்சி மாநாடு இன்று (ஜன.14) துவங்குகிறது.
மூன்று நாள் நடக்கும் இந்த மாநாட்டின் நிகழ்வில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றுகிறார். இம்மாநாட்டில் 105 நாடுகளைச் சேர்ந்த 180 க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.
மேலும் துணை வெளியுறவு அமைச்சர்கள், முன்னாள் பிரதமர்கள், முன்னாள் ஜனாதிபதிகள், தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள், ராணுவத் தலைவர்கள் மற்றும் பிற உயர்மட்ட அதிகாரிகள் ஆகியோர் வருடாந்திர மாநாட்டில் பங்கேற்பார்கள் என வெளியுறவு அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்கும் இந்த மாநாட்டில் வெளியுறவுத்துறைச் செயலாளர் விஜய் கோகலே, முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத், கப்பற்படை தலைமைத் தளபதி கரன்பீர் சிங் மற்றும் அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா நாடுகளின் படைத் தளபதிகளும் பங்கேற்க உள்ளனர்.
மூன்று நாள் நடக்கும் இந்த மாநாட்டின் நிகழ்வில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றுகிறார். இம்மாநாட்டில் 105 நாடுகளைச் சேர்ந்த 180 க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.

இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்கும் இந்த மாநாட்டில் வெளியுறவுத்துறைச் செயலாளர் விஜய் கோகலே, முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத், கப்பற்படை தலைமைத் தளபதி கரன்பீர் சிங் மற்றும் அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா நாடுகளின் படைத் தளபதிகளும் பங்கேற்க உள்ளனர்.
இன்று ஈரான் அமைச்சர் வருகை
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் மாநாட்டில் பங்கேற்க ஈரான் வெளியுறவு அமைச்சர் ஜாவித் ஜப்ரி இன்று மூன்று நாள் அரசு முறைப்பயணமாக இந்தியா வருகிறார்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!