dinamalar telegram
Advertisement

விண்ணில் 17ல் ஏவப்படுகிறது ஜிசாட் - 30 செயற்கைக்கோள்

Share

Audio இந்த செய்தியை கேட்க

Your browser doesn’t support HTML5 audio

பெங்களுரு: 'தொலைதொடர்பு மற்றும் ஒளிபரப்பு சேவைகளுக்கான, 'ஜிசாட் - 30' செயற்கைக் கோள், வரும், 17ம் தேதி விண்ணில் செலுத்தப்படும்' என, இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான 'இஸ்ரோ' தெரிவித்துள்ளது. இம்மையம் வெளியிட்டுள்ள அறிக்கை:தென் அமெரிக்காவில், பிரென்ச் கயானாவின் கோரோ பகுதியில் உள்ளது, ஏரியன் விண்வெளி தளம். இங்கிருந்து, 'ஜிசாட் - 30' மற்றும் இடுல்சாட் நிறுவனத்தின், 'இடுல்சாட் கோனக்ட்' செயற்கைக் கோள்களுடன், 'ஏரியன் - 5' ராக்கெட், வரும், 17ம் தேதி விண்ணில் செலுத்தப்பட உள்ளது.
மொத்தம், 3,357 கிலோ எடையுள்ள, ஜிசாட் - 30 செயற்கைக்கோள், தொலைதொடர்பு, வீடு தேடி வரும் தொலைகாட்சி ஒளிபரப்புக்கான 'டி.டி.எச்., விசாட்' மற்றும், 'டிஜிட்டல்' சேவைகளுக்கு உதவும்.இதன், 'கியூ பேண்டு' டிரான்ஸ்பாண்டர், இந்தியா மற்றும் சுற்றியுள்ள தீவுகளுக்கும், 'சி பேண்டு' டிரான்ஸ்பாண்டர், வளைகுடா நாடுகள், ஏராளமான ஆசிய நாடுகள் மற்றும் ஆஸ்திரேலிய நாட்டின் தொலைதொடர்பு சேவைகளுக்கு துணைபுரியும்.ஜிசாட்-30 செயற்கைக்கோள், 15 ஆண்டுகள் இயங்கும் வகையில் மேம்பட்ட தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (2)

  • J,SHANMUGASUNDATAM -

    நல்லமுயற்ச்சி பாராட்டுக்கள், இவ்வளவுமுன்னேறியும், ஏன் இன்றும் ஒயர் மூலமாக கேபிள்டிவி இயக்கப்படுகிறது, ஒயரே இல்லாமல் டிவியைகாணமுடியாதா, அரசு இதைசெய்யவேண்டும், வரும் காலங்களில் மிண்சாரம்கூட ஒயர்வழி இல்லாமல் மாற்றுவழியை கண்டுபிடிக்கவேண்டும், ஆண்ட்ராய்டுபோன்போல் டிவி நிகழ்ச்சிகளைகாணவேண்டும், மிண்சாரத்திலேய வாகனங்கள் இயங்கவேண்டும், பெட்ரோல் டீசல் இல்லாமல் மாற்றுவழியைகடைபிடிக்கவேண்டும், வீட்டில் தண்ணீருக்காகபோர்போடாமல் அரசாங்கமே குழாய்வழியாக தண்ணீர்தரவேண்டும், எந்ததணிமனிதரும் போர்போடாமல் வெளிநாடுகளில் உள்ளதுபோல் நடவடிக்கை எடுக்கவேண்டும், அப்போதுதான் நீர்மட்டம் பல அடி உயரும்,

    மேலும் செய்திகள் :

Advertisement