dinamalar telegram
Advertisement

மாணவர்கள் மீது அத்துமீறல் பார்லி.,நிலைக்குழு கேள்வி

Share
புதுடில்லி : 'போராட்டம் நடத்தும் மாணவர்கள் மீது, டில்லி போலீசார், தடியடி, துப்பாக்கிச் சூடு போன்ற அதிகாரத்தை அத்துமீறி பயன்படுத்துவது ஏன்' என, உள்துறைக்கான பார்லி., நிலைக்குழு கேள்வி எழுப்பியுள்ளது.
டில்லி மற்றும் என்.சி.ஆர்., எனப்படும், தலைநகர் மண்டல பகுதிகளில் குற்றச்செயல்கள் அதிகரித்து வருவது பற்றி ஆலோசிக்க, காங்., மூத்த தலைவர் ஆனந்த் சர்மாதலைமையிலான, உள்துறைக்கான பார்லி., நிலைக்குழு நேற்று கூடியது.

இதில், உள்துறை அமைச்சக உயர் அதிகாரிகள், டில்லி போலீஸ் கமிஷனர் அமுல்யா பட்னாயக் ஆகியோரும் பங்கேற்றனர். கூட்டத்தில், பார்லி., நிலைக்குழுவினர் கூறியதாவது:டில்லியில், போராட்டங்களை ஒடுக்குகிறோம் எனக் கூறி, அடிக்கடி, 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.
இதனால், பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். போராட்டம் நடத்தும் மாணவர்கள் மீது, தடியடி, துப்பாக்கிச் சூடு என, டில்லி போலீசார், தங்கள் அதிகாரத்தை பயன்படுத்துவது ஏன்?மாணவர்களிடம், அதிகாரத்தை பயன்படுத்தாமல், பேச்சு நடத்தி, பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (28)

 • Endrum Indian - Kolkata,இந்தியா

  யார் மாணவர்கள்???பல்கலைக்கு படிக்க செல்கின்றவர்கள் தான் அரசியல் செய்ய செல்கின்றவர்கள் மாணவர்களே அல்ல??அவர்கள் தீவிரவாதிகள்?? அடி உதவுவது போல அண்ணன் தம்பி கூட உதவ மாட்டான்.

 • ஆப்பு -

  மாணவர்கள் அத்து மீறுனாங்கன்னு ஒரு குழு... அரசாங்கம் போலீஸ் அத்து மீறிச்சுன்னு இன்னொரு குழு. இப்பிடி கத்திக்கிட்டே இருங்க.

 • மனுநீதி-என் சொந்த பெயர் ராஜா - Chennai,இந்தியா

  இந்த நிலைக்குழு தான் 2ஜி திருட்டில் இவ்வளவு இழப்பு என்று ஒரு எண்ணை கொடுத்தது. ஆனால் இன்று திருடர்கள் இருவரும் அமைச்சர்கள், என்ன செய்ய முடியும் இவர்களால். தாம் இருக்கிறோம் என்று காட்டிக்கொள்வதற்காகவே இந்த அறிக்கை.

 • Cheran Perumal - Radhapuram,இந்தியா

  மாணவர்களை தூண்டுவதே காங்கிரஸ்தான்.

 • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

  மாணவர்கள் போராட்டம் என்றால் அனைவரும் ஆதரிப்பார்கள் என்றும் எதிர்க்கட்சிகள் தேசிய கட்சிகள், ஏன் ஆளும் கட்சிகளே கூட ஆதரவு தரும் என்றும், மாணவர்கள் பலம் மிகவும் அதிகமானது எனும் மாணவர்களை உசுப்பி விட்டு அவர்களை எதோ செயற்கரிய செயல்களை செய்பவர்களை போல சித்தரித்திருக்கிறார்கள். பெற்றோர்கள் ஆசிரியர்கள் சொல்படி கேளாமல் உண்மையறியாமல் தங்களை ஹீரோ க்கள் என்று நினைத்து வேறு யாரோ தூண்டி விட ஏமாற்றப்படுகிறார்கள் அவர்கள். நியாயமான போராட்டங்கள் நீதிபீரளும்போது சமூக அவலங்கள் போன்றவற்றை எதிர்க்க வேண்டிய நேரத்தில் அவசியமிருந்தால் எதிர்ப்பது ஜனநாயக வழியில் ஏற்கலாம். நிர்பயா வழக்கு, ஊமை சிறுமி பலாத்காரம் போன்ற சமூக அவலங்களுக்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக மாணவர்கள் போராடுவது ஏற்கலாம். அதை விடுத்து எதற்கெடுத்தாலும் ஜாலி போக்கிற்காக என்றும் எதோ ஹீரோக்கள் என்றும் நினைத்து போராடுபவர்களை சட்டம் மாணவர்கள் என்று பாராமல் போராட்டத்தின் என்றே பார்க்கவேண்டும். சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும். இளம் பிராயத்தினர் எதிர்காலம் நிரம்ப இருக்கிறது என்று கருணை காட்டுவதை தவிர்க்க வேணும் விசாரணை அதிகாரிகள். பள்ளி கலோரியில் மட்டுமல்ல சமூகத்திலும் அவர்கள் பாடம் பெற்று கொள்ளட்டும். பட்டறிவால் வருவது தான் அவர்கள் அனுபவம் பெரியோர் சொல்பேச்சில் அல்ல என இருப்போர் பட்டறிவு பெறட்டும்.

Advertisement