Advertisement

பொங்கல் கரும்பு விற்பனைக்கு குவிப்பு

வால்பாறை:வால்பாறையில், பொங்கல் பண்டிகையையொட்டி கரும்பு விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ளது.வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதியில் பொங்கல் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. நாளை, 15ம் தேதி முதல், 17ம் தேதி வரை, மூன்று நாட்களுக்கு கொண்டாடப்படுகிறது.
விழாவை சிறப்பாக கொண்டாட மக்கள் கரும்பு, மஞசள் கொத்து, பூளைப்பூ கட்டு மற்றும் புத்தாடைகளை வாங்கவும் வால்பாறையில் குவிந்துள்ளனர்.பெரும்பாலான எஸ்டேட் கோவில்களில் தொடர்ந்து, மூன்று நாட்கள் பொங்கல் திருவிழா கொண்டாடப்படுகிறது. விழாவில், நையாண்டி மேளம், கரகாட்டம், காவடியாட்டம், செண்டைமேளம், சிக்காட்டம் உள்ளிவை இடம் பெறுகின்றன.கரும்பு வியாபாரிகள் கூறுகையில், 'இந்த ஆண்டு சமவெளிப்பகுதியில் போதிய மழை இல்லாததால், கரும்பு விளைச்சல் குறைவாக உள்ளது. வால்பாறையில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன கரும்பு, மதுரை, பொள்ளாச்சி, உடுமலை பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளது. ஜோடி கரும்பு 80 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது,' என்றனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement