விமானத்தில் கோளாறு பன்னீர் பயணம் தாமதம்
சென்னை:தமிழக துணை முதல்வர் செல்லவிருந்த, தனியார் விமானத்தில், இயந்திர கோளாறு ஏற்பட்டதால், இரண்டு மணி நேரம் தாமதமானது.
தமிழக துணை முதல்வர், பன்னீர்செல்வம் உட்பட, 149 பேருடன், சென்னையில் இருந்து, நேற்று மாலை, 6:30 மணிக்கு, தனியார் பயணியர் விமானம், மதுரைக்கு புறப்பட்டது.விமானம், ஓடுபாதை அருகே சென்றபோது, விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டிருந்ததை, பைலட் கண்டறிந்தார். உடனடியாக விமானம் புறப்பட்ட இடத்திற்கே, கொண்டு வந்து நிறுத்தப்பட்டது.துணை முதல்வர் உட்பட, பயணியர் அனைவரும், விமானத்திலேயே அமர வைக்கப்பட்டனர்.பின், கோளாறு சரிசெய்யப்பட்டு, இரண்டு மணி நேரம் தாமதமாக, இரவு, 8:30 மணிக்கு, புறப்பட்டு சென்றது.

தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!