Advertisement

வண்டலுார் பூங்காவில் புலிகளை ரசிக்கலாம்

Share
தாம்பரம்:'வண்டலுார் உயிரியல் பூங்காவிற்கு, புதுவரவாக வந்துள்ள, புலிக்குட்டிகளை, பொங்கல் விடுமுறைக்கு வரும் பார்வையாளர்கள் கண்டுகளிக்கலாம்' என, பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:பூங்காவில், 27 புலிகள் உள்ளன. 2019 செப்., 18ல், ஆதித்யா மற்றும் ஆர்த்தி என, இரண்டு புலிகள் பிறந்தன.இவை, மூன்று மாதங்களாக மருத்துவர்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டுஇருந்தன.இவற்றை, பொங்கல் விடுமுறைக்கு பூங்காவிற்கு வரும், பார்வையாளர்கள் கண்டுகளிக்கும் வகையில், ஏற்பாடுகள் செய்யப்பட்டுஉள்ளன.இவை இரண்டையும், காலை, 11:00 மணி முதல் மாலை, 3:00 மணி வரை பார்வையாளர்கள் பார்த்து ரசிக்கலாம். 14 முதல், 19 வரை, பொங்கல் விடுமுறையில், பூங்காவிற்கு வரும் பார்வையாளர்கள் வசதிக்காக, 300 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement