கட்சியினருக்கு, ஸ்டாலின் எழுதிய கடிதம்: அந்தமான் தி.மு.க., அலுவலகத்தில், கருணாநிதி சிலை திறப்பு விழா நடந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின், அந்தமான் மாநில செயலர், கே.ஜி.தாஸ், 'கருணாநிதியை, தமிழின தலைவராக குறிப்பிடுகிறீர்கள்; அது தவறு. அவர் இந்தியாவின் தலைவர்' என்றார். அது, தொண்டர்களுக்கு கிடைத்த பெருமை.
அந்தமான் மாநில செயலர் குழந்தை, என்னிடம் ஒரு கோரிக்கை வைத்தார். 'இனிமேல், தி.மு.க., - காங்கிரஸ்கூட்டணி, லோக்சபா தேர்தலில், தேனி தவிர்த்து, தமிழகம், புதுச்சேரியில், 39 இடங்களில் வென்றது என சொல்லாதீர்கள்; அந்தமானையும் சேர்த்து, 40 இடங்களில், நமக்கு வெற்றி என, சொல்லுங்கள்' என்றார். அது, தி.மு.க.,விற்கும், அங்கு வாழும் தமிழர்களுக்கும் பெருமை சேர்க்கிறது. இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
புகார் மனு:
டில்லியில், தலைமை தேர்தல் ஆணையர் சுனில்அரோரா, தேர்தல் ஆணையர் அசோக் லவாசா ஆகியோரை, தி.மு.க., முதன்மை செயலர் டி.ஆர். பாலு, நேற்று சந்தித்து மனு அளித்தார். அதில், 'சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாகவும், அதில், முதல்வர் இ.பி.எஸ்., மற்றும் அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்தும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, வலியுறுத்தி உள்ளார்.
இந்தியாவின் தலைவர் கருணாநிதி என்று சொன்னால் . . . . அப்ப வருகின்ற டெல்லி சட்டமன்ற தேர்தலில் திமுக போட்டியிடுமா? அடுத்த டெல்லி முதல்வர் ஸ்டாலின் என்று சொல்லுங்கள். . . . . தமாஸுக்கு அளவே இல்லையா. . . . . . . ஏற்கனவே ஜப்பான் துணை முதல்வராக இருந்தவருக்கு. . . . . டெல்லி முதல்வராக பொறுப்பேற்பதற்கு ஒன்றும் பிரச்னை இருக்குக்காது என்று நினைக்கிறன் . . . . .