Advertisement

வில்சன் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிவாரணம்

Share
சென்னை: சுட்டுக் கொல்லப்பட்ட, சிறப்பு சப் - இன்ஸ்பெக்டர் குடும்பத்திற்கு, 1 கோடி ரூபாய் நிவாரண தொகைக்கான காசோலையை, முதல்வர் இ.பி.எஸ்., வழங்கினார்.

கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை சோதனை சாவடியில், 8ம் தேதி இரவு, சிறப்பு சப் - இன்ஸ்பெக்டர் வில்சன் பணியில் இருந்தார். இரவு, 9:30க்கு, அங்கு வந்த மர்ம நபர்கள், அவரை கைத்துப்பாக்கியால் சுட்டதுடன், கத்தியாலும் குத்தினர். அவர், அதே இடத்தில் இறந்தார். அவரது குடும்பத்திற்கு, நிவாரண உதவியாக, 1 கோடி ரூபாய் வழங்கப்படும்; அவர் குடும்பத்தில் ஒருவருக்கு, அரசு பணி வழங்கப்படும் என்று, முதல்வர் அறிவித்தார்.

அதன்படி, சென்னை, தலைமை செயலகத்தில், நேற்று வில்சன் குடும்பத்தினருக்கு, அரசு சார்பில், 1 கோடி ரூபாய்க்கான காசோலையை, முதல்வர் இ.பி.எஸ்., வழங்கினார். இந்நிகழ்ச்சியில், தலைமை செயலர் சண்முகம், உள்துறை செயலர் பிரபாகர், டி.ஜி.பி., திரிபாதி, கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடனேரே பங்கேற்றனர்.

இது குறித்து, வில்சன் மனைவி ஏஞ்சல் மேரி கூறியதாவது: ஆறு நாட்களாக, கணவரை இழந்து வாடுகிறேன். முதல்வர், உதவித்தொகை அளித்துள்ளார். என் மகளின் கல்விக்கும் உதவி செய்வதாக கூறியுள்ளார். அரசு பணியில் இருக்கும் அதிகாரிகளுக்கு, இதுபோன்ற கொடுமை வரக் கூடாது. குற்றவாளிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுப்பதாக, முதல்வர் உறுதி அளித்துள்ளார். அவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மூத்த மகளுக்கு, அரசு வேலை தருவதாக கூறி உள்ளார். எந்த உதவி வேண்டுமானாலும் செய்து தருவதாக தெரிவித்துள்ளார். இவ்வாறு, அவர் கூறினார்.

'என்கவுன்டர்' செய்யுங்கள்! காங்., - எம்.எல்.ஏ., ஆவேசம்'சிறப்பு சப் - இன்ஸ்பெக்டர் வில்சன் மரணத்திற்கு காரணமானவர்களை, 'என்கவுன்டர்' செய்ய வேண்டும்' என, காங்., - எம்.எல்.ஏ., பிரின்ஸ் தெரிவித்தார்.

அவர் அளித்த பேட்டி: வில்சனை கொலை செய்தவர்களை கண்டுபிடிக்க, அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். சிலரை கைது செய்துள்ளதாக சொல்கின்றனர்; அது போதாது. சரியான குற்றவாளிகளை கண்டுபிடித்து, 'என்கவுன்டர்' செய்ய வேண்டும். கேரள எல்லையான களியக்காவிளை பகுதியில், வில்சன் கொலை செய்யப்பட்டது, திட்டமிட்ட நிகழ்வு போல தெரிகிறது. அவரது குடும்பத்திற்கு, 1 கோடி ரூபாய் கொடுத்துள்ள அரசுக்கு நன்றி. வில்சனின் மூத்த மகள், பட்ட மேற்படிப்பு படித்துள்ளார். அவருக்கு தகுந்த வேலை தர வேண்டும். இளைய மகள் மாற்றுத் திறனாளி. அவருக்கு தேவையான வசதிகளை, அரசு செய்து தர வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

தீயணைப்பு வீரர்கள் முதல்வரிடம் வாழ்த்து:விளையாட்டு போட்டிகளில், பதக்கங்கள் வென்ற தீயணைப்பு வீரர்கள், முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

உத்தர பிரதேசம் மாநிலம், லக்னோவில், டிசம்பர், 20 முதல், 22 வரை, இரண்டாவது தேசிய தீயணைப்பு விளையாட்டுகள் மற்றும் தீயணைப்பு சேவை விளையாட்டு போட்டிகள் நடந்தன. போட்டிகளில், 16 மாநிலங்களின் தீயணைப்பு துறையை சேர்ந்த, 700 தீயணைப்பு வீரர்கள் பங்கேற்றனர். இப்போட்டியில், தொழில் ரீதியான தீயணைப்பு போட்டியில், தமிழக தீயணைப்பு வீரர் கோவிந்தசாமி தங்கம் வென்றார்; சசிகுமார் வெண்கலம் வென்றார். தேசிய கராத்தே போட்டியில், கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரத்தை சேர்ந்த சுஜின் தங்கம் வென்றார். இதுதவிர மற்ற போட்டிகளையும் சேர்த்து, மொத்தம், 15 தங்கம், 18 வெள்ளி, 13 வெண்கலப் பதக்கங்களை வென்றனர்.

வெற்றி பெற்ற தீயணைப்பு வீரர்கள், நேற்று தலைமை செயலகத்தில், முதல்வரை சந்தித்து, பதக்கங்களை காண்பித்து, வாழ்த்து பெற்றனர். இந்நிகழ்ச்சியில், தலைமை செயலர் சண்முகம், உள்துறை செயலர் பிரபாகர், டி.ஜி.பி., திரிபாதி, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை இயக்குனர் சைலேந்திரபாபு மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர். அத்துடன், கடலோர பாதுகாப்பை வலுப்படுத்த எடுத்த முயற்சிகளுக்காகவும், நாட்டின் முன் மாதிரியான அமைப்பாக விளங்குவதற்காகவும், தமிழக கடலோர காவல் படைக்கு, 2019ம் ஆண்டிற்கான, 'ஸ்கோச் தங்க விருது, தேசிய கடல்சார் தேடல் மற்றும் மீட்பு விருது'கள் வழங்கப் பட்டுள்ளன. அவ்விருதுகளை, கடலோர பாதுகாப்புப்படை, கூடுதல் டி.ஜி.பி., வன்னியபெருமாள், நேற்று முதல்வரிடம் காண்பித்து, வாழ்த்து பெற்றார்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (3)

  • skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா

    ஒரு பிராமின் பொண்ணு அதிமுக காரன் வச்ச பேனர் விழுந்து செத்துப்போச்சு என்ன தந்தானுக, கிறிஸ்துவன் என்றால் என்ன அவ்ளோபயமா வாரி வழங்கிறாக, ஓ இது சுட்டுக்கொலை செய்யப்பட்ட ஒரு போலீசு ஆபீஸருங்க ஆனால் அவாகட்ச்சிக்காரனுக வச்சபேனரால் செத்தது கீழ் சாதி பொண்ணா இருந்தா கிடைச்சுருக்கும் கண்றாவி இது கொலை அது விபத்து ரிசல்ட் ரெண்டுமலே மரணமேதான் துயரசுமேதான்

  • blocked user - blocked,மயோட்

    திராவிட மத ஆட்சியாளர்கள் வன்முறை கும்பல்களை வாக்குப்பெறும் நோக்கத்துடன் மென்மையாக கையாளக்கூடாது. தீவிரவாதம் செய்பவர்களை NIA வை வைத்து முழுமையாக விசாரிக்கவேண்டும்.

  • jagan - Chennai,இந்தியா

    சபை இந்த உதவி தொகையை பிடுங்காமல் பார்த்து கொள்ளுங்க.

Advertisement