Advertisement

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு; 5 பேர் பலி

Share
பால்டிமோர் : அமெரிக்காவின் பால்டிமோர் பகுதியில் அடுத்தடுத்து நடந்த எட்டு துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் ஐந்து பேர் உயிரிழந்தனர்; ஏழு பேர் காயமடைந்தனர்.

அமெரிக்காவின் பால்டிமோர் பகுதியில் கடந்த 11ம் தேதி முதல் தொடர்ந்து எட்டு இடங்களில் துப்பாக்கிச்சூடு தாக்குதல்கள் நடந்தன.கடந்த 11ம் தேதி பிற்பகல் 2:30 மணியளவில் வடகிழக்கு பால்டிமோரில் மர்ம நபர்கள் நடத்திய தாக்குதலில் மூன்று பெண்கள் காயமடைந்தனர்.அதில் ஒருவர் மருத்துவமனைக்கு செல்லும்வழியில் உயிரிழந்தார். அதேநாளில் மத்திய தென்கிழக்கு மற்றும் வடமேற்கு பால்டிமோர் பகுதிகளில் அடுத்தடுத்து துப்பாக்கிச்சூடு தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

இரவு 11:00 மணிவரை எட்டு இடங்களில் நடத்தப்பட்ட அந்த தாக்குதல்களில் மொத்தம் ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்; ஏழு பேர் காயமடைந்தனர்.இந்த துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement