dinamalar telegram
Advertisement

எதிர்கட்சிகள் கூட்டம்: ஸ்டாலின் புறக்கணித்தது ஏன்?

Share
சென்னை: குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நடந்த, எதிர்க்கட்சிகள் கூட்டத்தில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பங்கேற்காதது குறித்து, புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

சமீபத்தில் நடந்து முடிந்த, ஊரக உள்ளாட்சி தேர்தலிலும், மாவட்ட ஊராட்சி, ஒன்றிய தலைவர் பதவிக்கான தேர்விலும், காங்கிரஸ் எதிர்பார்த்த இடங்களை, தி.மு.க., ஒதுக்கவில்லை. இதனால், அதிருப்தி அடைந்த, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தி.மு.க.,வை விமர்சித்து அறிக்கை விடுத்தார். அவரது அறிக்கை தி.மு.க.,வில் சலசலப்பை ஏற்படுத்தியது.

முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரம் சமீபத்தில் 'டிவி'க்கு அளித்த பேட்டியில், தி.மு.க., கூட்டணியில் காங்கிரஸ் இருப்பதால் ஏற்படும் பலம் குறித்து தெரிவித்தார். இதுவும் ஸ்டாலினை அதிருப்தி அடைய வைத்துள்ளது. சிதம்பரம், அழகிரி ஆகியோர் மீது உள்ள அதிருப்தியால்தான் டில்லி கூட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்கவில்லை என கூறப்படுகிறது.

இது குறித்து, தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது: தமிழக காங்கிரசின் முன்னாள் தலைவர் ஒருவரும், பெண் தலைவர் ஒருவரும் சோனியாவிடம், 'சட்டசபை தேர்தலில், தி.மு.க.,வுடன் கூட்டணி வைக்க வேண்டாம். ரஜினியுடன் கூட்டணி அமைத்தால் காங்கிரசுக்கு துணை முதல்வர் பதவி, ஆட்சியில் பங்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது' என, கூறியுள்ளனர்.

'ரஜினி கட்சி துவக்கி பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்தால் காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவு ஏற்படும். எனவே பா.ஜ., பக்கம் அவரை சாயவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்' என, ஏ.கே.அந்தோணி, சித்தராமையா போன்ற மூத்த தலைவர்களும் சோனியாவிடம் தெரிவித்துள்ளனர். இந்த தகவல் ஸ்டாலினுக்கு தெரிய வந்ததும் இனி, காங்கிரசுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டியதில்லை என்ற முடிவை எடுத்துள்ளார்.

மேலும் அடுத்து நடக்கவுள்ள நகராட்சி, மாநகராட்சி தேர்தலில் காங்கிரஸ் அதிக இடங்கள் கேட்டு பேரம் பேசுவதை தடுக்கவும் டில்லி கூட்டத்தில், தி.மு.க., பங்கேற்கவில்லை. இவ்வாறு அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (71)

 • Vittalanand -

  moola paththiram veru yaaridamo kidaiththu vittatham. murasoli maakkanukku thodarpu paduththave mudiyalayaam. murasoli paththirame dubakkooraam.yithanaal moolam vanthu nagaramudiyalayam

 • D.RAMIAH - RAIPUR,இந்தியா

  திமுகவுக்கும் காங்கிரசுக்கும் கோவிந்தா கோவிந்துடா

 • Poongavoor Raghupathy - MUMBAI,இந்தியா

  Congress Party is inside a sinking boat and for DMK it will take some more time to get into a sinking boat. DMK does not want to travel in a boat of Congress that is sinking and DMK's boat will sink after 2020 election. Edappadi is travelling merrily on the land and if he takes up a boat and its fate will be known after 2020 elections. Today in Tamilnadu one Party who is improving and doing some service to the people is ADMK under the leadership of Edappadi. What will happen to the Dravidian Parties will be known only when Rajini comes into electoral Politics.Both BJP and Congress will try to woo Rajini before elections. But it is love's labor lost for Congress-DMK. It may not be a surprise if Rajini becomes a CM after 2021 election with DMK thrown out into 3rd Position.It is good if any party other than DMK is given the power to rule in 2021 elections.

 • Endrum Indian - Kolkata,இந்தியா

  அதில் என்ன பேசுவார்கள் என்று தெரியாது???ஆகவே துண்டு சீட்டில் என்ன அவர்கள் எழுதிக்கொடுக்க வேண்டும் என்று தெரியாததனால் கலந்து கொள்ளவில்லை இது தான் சரியான பதில் - இப்படிக்கு துண்டுசீட்டு சுடலை மாயாண்டி

 • narayanan iyer - chennai,இந்தியா

  இப்போ ஸ்டாலின் என்ன நினைக்கிறார் என்றால் . நம் தந்தை கட்சியிலும், ஆட்சியிலும் பதவியில் இருக்கும் போது நாம் ஊதாரிதனமாக சுற்றி திரிந்ததால் படிக்கவும் இல்லை, எதிர்காலத்தைப்பற்றி நினைக்கவும் இல்லாமல் இருந்துவிட்டோம். இப்போ பதவி வந்தபின் ஒன்று தெரியவில்லையே . வயதும் ஆகிவிட்டது எப்படியாவது சேர்த்த சொத்தை காப்பாற்றினால் போதும் என்று வருந்தியே காலத்தை ஓட்டுகிறார் . இது தெரிந்தும் இன்னும் கட்சிக்காரர்கள் ஏன் ஓடவில்லை ? நமக்கும் ஏதாவது கிடைக்கும் என்ற நப்பாசை.

Advertisement