Advertisement

இந்திய மாணவிக்கு பாக். டிரைவர்

துபாய் : ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாயில் இந்திய வம்சாவளி மாணவி காரில் தவறவிட்ட முக்கிய ஆவணங்களை பாகிஸ்தான் டிரைவர் திரும்ப ஒப்படைத்தார்.

ஐரோப்பிய நாடான இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரை சேர்ந்தவர் ரேச்சல் ரோஸ். கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர் லான்காஸ்டர் பல்கலையில் நிறுவன சட்டம் படிக்கிறார். துபாயில் உள்ள தோழியின் பிறந்தநாள் விழாவிற்கு ரேச்சல் ரோஸ் சென்றார்.அங்கு பாகிஸ்தானை சேர்ந்த டிரைவர் மொடாசர் காதிமின் வாடகை காரில் பயணித்தார்.அந்த வழியாக ரேச்சல் ரோசின் தோழிகள் சிலர் வேறு வாகனத்தில் வந்தனர். இதனால் அந்த வாகனத்திற்கு மாறிய ரேச்சல் ரோஸ் கைப்பையை காரில் தவற விட்டார்.

சில மணி நேரத்திற்குப் பின் டிரைவர் காதிம் கைப்பையை பார்த்தார். அதில் ரேச்சல் ரோசின் இங்கிலாந்துக்கான கல்வி விசா பல்கலை அடையாள அட்டை டிரைவிங் லைசென்ஸ் இன்சூரன்ஸ் ௧௯ ஆயிரம் ரூபாய் உள்ளிட்டவை இருந்தன.மாணவியை தொடர்புகொள்ள வழியின்றி டிரைவர் காதிம் சாலை போக்குவரத்து அலுவலக கால்சென்டரில் தகவல் கொடுத்தார். கைப்பையை இழந்த ரேச்சல் ரோஸ் போலீசாருக்கு தகவல் தெரிவித்து காரை கண்டுபிடிக்க முயன்றார். அது முடியாமல் போனதால் மான்செஸ்டர் சென்று விட்டார்.


இதற்கிடையே ரேச்சல் ரோசின் புகார் குறித்து கால் சென்டர் மூலம் தகவல் அறிந்த டிரைவர் காதிம் அந்நாட்டு அதிகாரிகள் உதவியுடன் முகவரியை கண்டுபிடித்து ரேச்சல் ரோசிடம் கைப்பையை ஒப்படைத்தார்.இதனால் மகிழ்ந்த குடும்பத்தினர் டிரைவரை பாராட்டி ௧௦ ஆயிரம் ரூபாய் அன்பளிப்பு வழங்கினர். அதனை காதிம் வாங்க மறுத்துவிட்டார்.இந்திய வம்சாவளி மாணவியின் கைப்பையை ஒப்படைத்த பாக். டிரைவரின் செயலுக்கு பாராட்டுகள் குவிகின்றன.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • பார்த்திபன் -

    உலகில்அணைத்து ஓட்டுனர்களும் நேர்மையணர்வெர்களே, பாகிஸ்தான் ஓட்டுனர் விதிவிலக்கு இல்லை

Advertisement