dinamalar telegram
Advertisement

ம்ஹூம்... வரலை நாங்க! காங்., சோனியா அழைத்த கூட்டத்திற்கு பெரிய கட்சிகள்...

Share
Tamil News
புதுடில்லி: குடியுரிமை திருத்த சட்டம் உள்ளிட்ட விவகாரங்களில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாக விவாதிப்பதற்காக காங்., தலைவர் சோனியா அழைப்பு விடுத்திருந்த எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் முக்கிய பெரிய கட்சிகள் பங்கேற்கவில்லை. ஸ்டாலின், மம்தா பானர்ஜி, மாயாவதி, அரவிந்த் கெஜ்ரிவால், உத்தவ் தாக்கரே ஆகியோர் புறக்கணித்தனர்.

சி.ஏ.ஏ., எனப்படும் குடியுரிமை திருத்தச் சட்டம், என்.ஆர்.சி., எனப்படும் தேசிய குடிமக்கள் பதிவேடு, என்.பி.ஆர்., எனப்படும் தேசிய மக்கள்தொகை பதிவேடு பிரச்னைகளை முன்வைத்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. டில்லி ஜவஹர்லால் நேரு பல் கலையில் நடந்த தாக்குதலால் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இந்தப் போராட்டங்களுக்கு, காங்., கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

குடியுரிமை திருத்தச் சட்டம் உள்ளிட்ட பிரச்னைகளில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விவாதிப்பதற்காக எதிர்க்கட்சிகளின் கூட்டத்துக்கு, காங்., தலைவர் சோனியா அழைப்பு விடுத்திருந்தார். டில்லியில் பார்லி., வளாகத்தில் இந்தக் கூட்டம் நேற்று நடந்தது. இந்தப் பிரச்னைகள் குறித்து முக்கிய எதிர்க்கட்சிகள் ஏற்கனவே தங்களுக்குள் விவாதம் நடத்தின. காங்., மூத்த தலைவர் குலாம் நபி ஆசாதுடனும் ஆலோசனை நடத்தின. அப்போது, தொடர்ந்து ஆதரவு அளித்து மாணவர்கள் போராட்டத்தை தீவிரபடுத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் சோனியா நடத்திய கூட்டத்தை முக்கிய எதிர்க்கட்சிகள் புறக்கணித்துள்ளன. இதற்கு பல்வேறு அரசியல் காரணங்கள் கூறப்படுகின்றன. காங்., தலைமையிலான, ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்றுள்ள தி.மு.க., இந்தக் கூட்டத்தை புறக்கணித்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தங்களுடைய மாநிலங்களில் போராட்டம் நடத்தி வரும் திரிணமுல் காங்., தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி, உத்தர பிரதேசத்தை சேர்ந்த பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதியும் புறக்கணித்துள்ளனர். காங்., கூட்டணியில் மஹாராஷ்டிராவில் ஆட்சியில் அமர்ந்துள்ள உத்தவ் தாக்கரேயின் சிவசேனாவும் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

டில்லியில் விரைவில் சட்டசபை தேர்தலை சந்திக்கும் நிலையில், ஆம் ஆத்மி தலைவரும், டில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலும் புறக்கணித்தார். தேசியவாத காங்., தலைவர் சரத் பவார், கம்யூ., தலைவர்கள் சீதாராம் யெச்சூரி, டி. ராஜா, ஜார்க்கண்ட் முதல்வரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவருமான ஹேந்த் சோரன் உட்பட 20 கட்சிகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். காங்., சார்பில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் தலைவர் ராகுல் பங்கேற்றனர்.

ஜார்க்கண்ட் முதல்வராக, ஹேமந்த் சோரன் கடந்த மாதம் பதவியேற்றபோது, பெரும்பாலான எதிர்க்கட்சிகள் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றன. கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக, குடியுரிமை சட்டத்தை எதிர்த்து போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், இந்தக் கூட்டத்தை முக்கிய எதிர்க்கட்சிகள் புறக்கணித்துள்ளன. இது, சோனியா தலைமையிலான காங்.,குக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

தீர்மானம் நிறைவேற்றம்:எதிர்க்கட்சிகள் நடத்திய கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளதாவது: சி.ஏ.ஏ., - என்.பி.ஆர்., மற்றும் என்.ஆர்.சி., ஆகியவை, அரசியல் சாசனத்துக்கு விரோதமான ஒரு தொகுப்பு. இது ஏழை, எளிய மக்கள், எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினர், மதம் மற்றும் மொழி ரீதியிலான சிறுபான்மையினரை குறி வைத்து கொண்டு வரப்பட்டுள்ளது. அதனால், சி.ஏ.ஏ., சட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். என்.பி.ஆர்., கணக்கெடுப்பு பணியை நிறுத்த வேண்டும். இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சோனியா விளாசல்:எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் காங்., தலைவர் சோனியா பேசியதாவது: நாட்டில் பொருளாதார மந்தநிலை நிலவுகிறது, வேலை வாய்ப்பு இல்லை, வளர்ச்சிப் பணிகள் நடக்கவில்லை. இதுபோன்ற குறைகளை மூடி மறைக்கும் திசை திருப்பும் முயற்சியில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஈடுபட்டுள்ளனர். சி.ஏ.ஏ. மற்றும் என்.ஆர்.சி. ஆகியவற்றின் மூலம் அவர்களுடைய நிர்வாக திறமையின்மை மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க முடியாதது வெளிப்படையாக தெரிய வந்துள்ளது.

மத்திய அரசின் முயற்சிகளை எதிர்க்கட்சிகள் இணைந்து முறியடிப்போம். இந்த அரசின் மீதான மக்களின் கோபம் தற்போது நாடு முழுவதும் வெளிப்பட்டுள்ளது. ஆனால் மக்களை திசைதிருப்பும் வகையில் மோடி மற்றும் அமித் ஷா தொடர்ந்து பொய் தகவல்களை தெரிவித்து வருகின்றனர். அவர்களுடைய திட்டம் வெற்றி பெற விட மாட்டோம். இவ்வாறு அவர் பேசினார்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (14)

 • Bhagat Singh Dasan - Chennai,இந்தியா

  தில்லி தேர்தல் வரை இந்த தீ அணையாது, அணைக்கவும் விடமாட்டார்கள். கெஜ்ரி தான் தான் அடுத்த முதல்வர் எனும் கனவில் இருக்கிறார்

 • Mano - Dammam,சவுதி அரேபியா

  ஜல்லிக்கட்டு போன்ற பாரம்பரிய நிகழ்வு அல்ல இது. இந்தியர்களின் குடியுரிமையை பற்றியது. மாணவர்கள் உணரவேண்டும். வெளிநாட்டு கைக்கூலிகளுக்கு அடிமையாகி உங்கள் வாழ்வை அழித்துக்கொள்ளாதீர்கள். உதாரணம் கூடங்குளம் போராட்டம். அங்கே போராடியவர்களுக்கு பணம் வெளிநாட்டிலிருந்து வந்தது என்று நீருபிக்கப்பட்டதும் போராட்டம் ஓய்ந்தது. அதுபோல்தான் இதுவும் சில அரசியல் கட்சிகளாலும், சில வெளிநாட்டு கைக்கூலிகளாலும் போராட்டம் நடத்தப்படுகிறது.

 • K.ANBARASAN - muscat,ஓமன்

  பப்பு இருக்கும் வரை காங்கிரஸ் தேறாது. பப்புவை பிரதமர் ஆக ஏற்று கொள்ள எந்த மாநில கட்சி தலைவரும் தயாராக இல்லை. ஆதலால் பப்பு இருந்தால் தான் பிஜேபிக்கு நல்லது.

 • ராஜவேலு ஏழுமலை - Gummidipoondi,இந்தியா

  எவனை நம்பியும் காங்கிரஸ் இல்லை மக்கள் பிரச்சனையை தீர்ப்பதில் என்றுமே முன் நிற்கும்.

 • R. Vidya Sagar - Chennai,இந்தியா

  நாயுடுகாரு பாவம் திருப்பதியில் பிச்சை எடுத்துக்கொண்டு இருக்கிறார். அவருக்கு ஒரு பிளைட் டிக்கட் அனுப்பியிருந்தால் ஓடோடி வந்திருப்பார்.

Advertisement