சிவசேனாவின் மூத்த தலைவர், சஞ்சய் ராவத் கூறியதாவது: பா.ஜ.,வைச் சேர்ந்த ஜெய் பகவான் கோயல் என்பவர், 'இன்றைய சிவாஜி, நரேந்திர மோடி' என்ற பெயரில்ஒரு புத்தகம் எழுதியுள்ளார். அதில், மோடியை, சத்ரபதி சிவாஜியுடன் ஒப்பிட்டு அவர் எழுதி உள்ளார். மோடியை நாங்கள் மதிக்கிறோம். அதே நேரத்தில், சிவாஜியுடன் அவரை ஒப்பிடுவதை ஏற்க முடியாது. மோடியை சந்தோஷப்படுத்த வேண்டும் என, நாவால், 'ஷூ'வை துடைப்பவர்கள் இவ்வாறு செய்துள்ளனர். அவர்களால் தான், மோடிக்கு கெட்ட பெயர் ஏற்படுகிறது. இது போன்றவர்களிடம் இருந்து அவர் விலகி இருக்க வேண்டும்.
இந்த புத்தகத்துக்கும், தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என, பா.ஜ., அறிவிக்க வேண்டும். மேலும், இந்த புத்தகத்துக்கு தடை விதிக்க வேண்டும்.தற்போது, பா.ஜ.,வில் உள்ள சிவாஜியின் குடும்பத்தைச் சேர்ந்த ராஜ்யசபா எம்.பி., சம்பாஜி ராஜே மற்றும் முன்னாள் எம்.பி.,யான உதயன்ராஜே போன்சலே, இது குறித்து தங்களுடைய கருத்தை தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
''தனிப்பட்ட பலனை பெறுவதற்காக, சிலர் இந்த புத்தகத்தை எழுதியுள்ளனர். சிவாஜியுடன், மோடியை ஒப்பிடுவதை ஏற்க முடியாது. ''இதுபோன்றவர்களை கட்சி கட்டுப்படுத்த வேண்டும்,'' என, சிவாஜி குடும்பத்தைச் சேர்ந்த, பா.ஜ., - எம்.எல்.ஏ.,வான சிவேந்திரராஜே போன்சலே கூறியுள்ளார். தேசியவாத காங்.,கைச் சேர்ந்த மாநில அமைச்சர் சக்கன் புஜ்பல், ஜிதேந்திரஅவாத், காங்., மூத்த தலைவர் சுஷில்குமார் ஷிண்டே உள்ளிட்டோரும், எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
பா.ஜ., விளக்கம்:
இந்தப் பிரச்னை குறித்து, பா.ஜ., ஊடகப்பிரிவு துணைத் தலைவர் சஞ்சய் மயுக் கூறியதாவது: இந்த புத்தககத்துக்கும், கட்சிக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. அது புத்தகத்தை எழுதியவரின் தனிப்பட்ட கருத்து. இது தொடர்பாக, இதை எழுதிய ஜெய் பகவான் கோயலுடன் பேசினேன். சம்பந்தப்பட்ட பகுதியை நீக்குவதற்கு தயாராக உள்ளதாக அவர் கூறியுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.
ஜெய் பகவான் கோயல் கூறியுள்ளதாவது: சத்ரபதி சிவாஜி போல, பிரதமர் நரேந்திர மோடி எப்படி அனைவரையும் அரவணைத்து செயல்படுகிறார்; மற்றவர்களால் முடியாததை, மோடி எப்படி நடத்தி காட்டுகிறார் என்பதை குறிக்கும் வகையிலேயே, இதை எழுதியுள்ளேன். ஆனால், சிலர் குறிப்பிட்ட பகுதிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மற்றவர்கள் மனம் புண்படும் வகையிலான, வாசகங்கள், வார்த்தைகளை நீக்குவதற்கு தயாராக உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.
சிவாஜியோ அன்னியர்களை ஓடஓட விரட்டியவர் , இவர் இப்போது கூட்டணி வைத்திருக்கும் கட்சி ஒரு அந்நியரின் தலைமையில் இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும் . அதுவும் ஒரு ஓட்டல் க்ளீனரின் தலைமையில் ?. நாடே வெட்கி தலைகுனியவேண்டிய தருணம் இது . நல்லவேளையாக இனியும் அவர்கள் தலைமையில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்க முடியவில்லை . அதுவரை இந்தியர்கள் கொஞ்சம் கவுரவமாக இருக்கலாம் .