dinamalar telegram
Advertisement

மத்திய அரசுக்கு நிதி மறதி நோய்: பா.ஜ., அரசை காங்., சாடல்

Share
Tamil News
புதுடில்லி: ''கடந்த ஐந்து ஆண்டுகளில், மத்திய அரசு, கூடுதல் வரியாக, 3 லட்சம் கோடி ரூபாய் வசூலித்தும், அதை செலவிடாதது ஏன்?'' என, காங்., தலைமை செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா கேள்வி எழுப்பியுள்ளார்.

மத்திய அரசு, கல்வி, சுற்றுச்சூழல் உள்ளிட்ட சில துறைகளின் வளர்ச்சிக்கு, 'செஸ்' எனப்படும் கூடுதல் வரி வசூலிக்கிறது. இது குறித்து, ரன்தீப் சுர்ஜேவாலா கூறியதாவது: மத்திய அரசு, 2014 ஏப்ரல் முதல், தற்போது வரையிலான, ஐந்து ஆண்டுகளில், கூடுதல் வரியாக, 3 லட்சத்து, 59 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இத்தொகை செலவிடப்படாமல், இந்திய ஒருங்கிணைந்த நிதியத்தில் இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இதை, 'மோடி அரசுக்கு, நிதியை சரிவர கையாளத் தெரியவில்லை' என்பதா அல்லது 'அரசுக்கு நிதி மறதி நோய் பீடித்துள்ளது' என்பதா, என்றே புரியவில்லை.

மத்திய கல்வி மையங்களின் கல்விக் கட்டணங்களை குறைக்க மறுக்கும் அரசு, உயர்கல்விக்காக வசூலித்த, 49 ஆயிரத்து, 101 கோடி ரூபாய் கூடுதல் வரியை செலவிடாமல் உள்ளது. டில்லி உள்ளிட்ட பல்வேறு நகரங்கள், காற்று மாசு காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மத்திய அரசு, துாய்மையான எரிசக்திக்காக கூடுதல் வரியாக, 38 ஆயிரத்து, 943 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. ஆனால், அத்தொகையும் செலவிடப்படாமல் அப்படியே உள்ளது.

கச்சா எண்ணெய் விலை உயர்வால், பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளது. இதனால், விவசாயிகளும்,நடுத்தர வர்க்கத்தினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், மத்திய அரசு, கச்சா எண்ணெய்க்காக வசூலித்த, 74 ஆயிரத்து, 162 கோடி ரூபாய் கூடுதல் வரியை செலவழிக்காமல் உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (6)

 • ஒரு நாள் முதலமைச்சர் - covai,இந்தியா

  செலவே இல்லை என்றால் வரி எதற்கு பொருளாதார புலியே .

 • Natarajan Ramasamy - Chennai,இந்தியா

  நன்றி. மிக நன்றி .உங்கள் கணக்கு படி 4 ,04 ,1 6 4 ,கோடி ரூபாய் தொடவேண்டிய அவசியம் இல்லாமல் நிதி துறை நிர்வாகத்தை நிர்மலா சீதாராமன் நிர்வகிக்கிறார். கஜானா காலி , இந்தியா பொருளாதாரம் அதள பாதாளத்திற்கு போய் கொண்டிருக்கிறது என்றெல்லாம் PC உம் மற்றவர்களும் சொல்வதெல்லாம் பிதற்றல் என்று காங்., செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா சொல்கிறாரோ? அல்லது அவர் இவ்வளவு லக்ஷம் கோடி பணத்தை ஏன் செலிவழக்க வில்லை. நாங்களாக இருந்தால் எங்களிடம் இருந்த PC MANMOHAN ,ECONOMIST கள் விட்டு வைத்திருக்க மாட்டார்கள் .PC சொன்னபடி என் போன்ற " அப்பாவி " தமிழர்களுக்கு புரியாது.

 • ருத்ரா -

  கண்ணுக்கு தெரிந்த ஒரே விஷயம் நிதி. நிதிஎங்கே போகிறது.... கைகளை தேடி. ரொம்ப அவசரம்னா ஆஸ்த்தான நிதி அமைச்சரை கேட்கலாம். அள்ளக் குறையாத அளவிற்கு வைத்துள்ளார்.

 • Indian Dubai - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  Of course yes. Pls provide from ITALY the looted amount from India by you & alliance.

 • blocked user - blocked,மயோட்

  காங்கிரஸ் ஆட்சி இருந்திருந்தால் அந்த மூன்று லட்சம் கோடியை வைத்து புதிதாக உலகவங்கியிடம் ஆறு லட்சம் கோடி கடன் வாங்கி அதையும் முழுவதுமாக ஆட்டையை போட்டு இருப்பார்கள். களவாணிகள் நிதி நிர்வாகம் பற்றி பேசுவதும், ஜாமீனில் இருக்கும் முன்னாள் கிங்க்பின் நிதி அமைச்சரும் தினமும் வெட்கமில்லாமல் அறிக்கை விட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.

Advertisement