டாடா மீதான அவதூறு வழக்கு: நுஸ்லி வாடியா வாபஸ்
மனு தாக்கல்:
'டாடா சன்ஸ்' குழும நிறுவனங்களின் வாரிய இயக்குனர் பதவியிலிருந்து, நுஸ்லி வாடியா, 2016ல் நீக்கப்பட்டார். இதை எதிர்த்து, டாடா நிறுவன தலைவர் ரத்தன் டாடா மற்றும் அந்த நிறுவனத்தின் வாரிய இயக்குனர்கள் மீது, நுஸ்லி வாடியா, மும்பை உயர் நீதிமன்றத்தில் அவதுாறு வழக்கு தொடர்ந்தார். டாடா நிறுவனம், தனக்கு, 3,000 கோடி இழப்பீடு தர வேண்டும் என்றும், தன் மனுவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை, மும்பை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து அவர், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு, சமீபத்தில் விசாரணைக்கு வந்தபோது, 'இந்த விவகாரத்தில் ரத்தன் டாடா, நுஸ்லி வாடியா ஆகிய இருவரும் பேச்சு நடத்தி, இணக்கமான தீர்வு காண வேண்டும்' என, நீதிபதிகள் அறிவுறுத்தி இருந்தனர்.

பரிசீலிக்கலாம்:
இந்நிலையில், இந்த வழக்கு, தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு முன், இன்று(ஜன.,13) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது: நுஸ்லியா வாடியாவை அவமதிப்பதற்கு, தனக்கு எந்த உள்நோக்கமும் இல்லை என, ரத்தன் டாடா வாக்குமூலம் அளித்துள்ளார். மும்பை உயர் நீதிமன்றமும், தன் உத்தரவில் இதை தெரிவித்துள்ளது. எனவே, நுஸ்லி வாடியா, இந்த வழக்கை வாபஸ் பெறுவது குறித்து பரிசீலிக்கலாம். இவ்வாறு, நீதிபதிகள் கூறினர். இதையடுத்து, ரத்தன் டாடாவுக்கு எதிரான அவதுாறு வழக்கை வாபஸ் பெறுவதாக, நுஸ்லி வாடியா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
வாசகர் கருத்து (5)
நுஸ்லி வாடியா , பாகிஸ்தானின் தந்தை என்று அழைக்கப்படும் முஹம்மது அலி ஜின்னாவின் ஒரே மகளான தினா வின் மகன். தினா பாகிஸ்தான் செல்ல மாட்டேன் என்று இறுதி வரை இந்தியக் குடிமகள் ஆக இருந்தவர். நுஸ்லி வாடியா மும்பையில் தொழில் அதிபர்.
நுஸ்லி வாடிய யார் தெரியுமா BOMBAY DEYING என்ற துணி வருமே இவனைத்தான் அன்று அம்பானி தந்தை காலி செய்து விமல் என்று கொண்டு வந்தார்கள் இதற்ற்கு உதவியது காங்கிரஸ் தான் இவரை காலி பண்ணியது காங்கிரஸ் தான்