Advertisement

யோக ஹயக்ரீவர் கோவிலில் அர்ச்சனை

Share
செங்கல்பட்டு:செட்டிப்புண்ணியம், யோக ஹயக்ரீவர் கோவிலில், வித்யா அபிவிருத்தி சங்கல்ப அர்ச்சனை, நேற்று நடைபெற்றது.செங்கல்பட்டு அடுத்த, செட்டிப்புண்ணியம் கிராமத்தில், தேவநாத பெருமாள் கோவிலில், கல்வி கடவுளாக விளங்கும், யோக ஹயக்ரீவர், ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது.இங்கு, மாணவ -- மாணவியர் தேர்வில், அதிக மதிப்பெண்கள் பெற்று, வெற்றி பெறுவதற்கு, கல்வி கடவுளாக விளங்கும், வேதாந்த தேசிகர் பூஜை செய்த, யோக ஹயக்ரீவர் சுவாமிக்கு, ஆண்டுதோறும், வித்யா அபிவிருத்தி சங்கல்ப அர்ச்சனை, நடைபெறுகிறது.இதில், ஆயிரக்கணக்கான மாணவர்கள் பங்கேற்பார்கள். இந்த ஆண்டு, வித்யா அபிவிருத்தி சங்கல்ப அர்ச்சனை, நேற்று, நடைபெற்றது.இதில், சிறப்பு யாகம் மற்றும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, மாணவர்கள் மற்றும் பெற்றோர் நீண்ட வரிசையில் வந்து சுவாமியை தரிசனம் செய்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement