Advertisement

ஊர்க்காவல் படை வீரருக்கு மாங்காடில் கத்திக்குத்து

மாங்காடில், ஊர்க்காவல் படை வீரரை, கத்தியால் குத்திய நபரை, போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.சென்னை, மாங்காடு அடுத்த பட்டூர், மெசின் தெருவைச் சேர்ந்தவர் மொய்தீன், 32; ஊர்க்காவல் படையில் பணிபுரிகிறார்.


நேற்று முன்தினம் இரவு, வீட்டின் அருகே நடந்து சென்றார்.அப்போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில், அதே பகுதியைச் சேர்ந்த பாஷாஜான், 45, என்பவர், வேகமாக சென்றார். இதை கவனித்த மொய்தீன், மெதுவாக செல்லுமாறு, அவரிடம் கூறினார். இதனால், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த பாஷாஜான், வீட்டில் இருந்த காய்கறி வெட்டும் கத்தியை எடுத்து வந்து, மொய்தீன் முகத்தில் குத்தினார். தாடையில் காயம் அடைந்த அவர், குன்றத்துார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மாங்காடு போலீசார் வழக்கு பதிந்து, பாஷாஜானை கைது செய்தனர்.
- நமது நிருபர் -
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement