Advertisement

சிறுவனை கடத்திய வாலிபருக்கு கம்பி

செங்கல்பட்டு:இருங்குன்றப்பள்ளியில், சிறுவனை துாக்கி சென்ற வாலிபரை, பொதுமக்கள் மடக்கி பிடித்து, போலீசில் ஒப்படைத்தனர்.

செங்கல்பட்டு, வேண்பாக்கம் அடுத்த, இருங்குன்றப்பள்ளியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி; ஆவின் பாலகம் நடத்தி வருகிறார். இவரது மகன் கேசவமூர்த்தி, 7. தனியார் பள்ளியில், யு.கே.ஜி., படிக்கிறார்.நேற்று முன்தினம் இரவு, கடையின் முன், சிறுவன் விளையாடினான். அப்போது, அங்கு வந்த ஒரு வாலிபர், கிருஷ்ணமூர்த்தியிடம், பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது.
அவர், பணம் தர மறுத்ததால், விளையாடி கொண்டிருந்த சிறுவனை துாக்கி சென்றார். சிறுவனின் அலறலை பார்த்து, பொதுமக்கள், வாலிபரை மடக்கி, சிறுவனை மீட்டனர். பின், செங்கல்பட்டு தாலுகா போலீசில், அவரை ஒப்படைத்தனர்.போலீசார் விசாரணையில், உத்திரமேரூர் அடுத்த, காவூர் கிராமத்தைச் சேர்ந்த சிவாஜி, 25, என்பது தெரியவந்தது. அவரிடம், போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement