Advertisement

பிரசவத்தில் பெண் பலி

சென்னை : பிரசவித்த பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பதில் அளிக்கும்படி, மருத்துவ சேவைகள் துறை இணை இயக்குனருக்கு, மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.


கடலுார் மாவட்டம், கலர்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர், குமார், 27. இவரது மனைவி பிரியா, 24, தலைபிரசவத்துக்காக, விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு, அறுவை சிகிச்சை வாயிலாக பிரியாவுக்கு, பெண் குழந்தை பிறந்தது. தாயும், குழந்தையும் மருத்துவமனையில், தொடர் கண்காணிப்பில் இருந்து வந்தனர்.இதற்கிடையில், பிரியாவிற்கு வயிறு வீக்கம் ஏற்பட்டு, ஜன., 1ல் உயிரிழந்தார்.அறுவை சிகிச்சையின் போது, வயிற்றில் பஞ்சு வைத்து டாக்டர்கள் தையல் போட்டு விட்ட தால், பிரியா இறந்து விட்டதாக உறவினர்கள் குற்றம் சாட்டினர்.இதுகுறித்து, மாநில மனித உரிமை ஆணையம் வழக்கு பதிவு செய்துள்ளது.



ஆணைய நீதிபதி துரை ஜெயச்சந்திரன், மருத்துவ சேவைகள் துறை இணை இயக்குனருக்கு அனுப்பியுள்ள நோட்டீசில், 'இந்த சம்பவம் குறித்து, உரிய விசாரணை நடத்தி, இரண்டு வாரத்திற்குள் விரிவான அறிக்கை அளிக்க வேண்டும்' என, உத்தரவிட்டுள்ளார்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement